திருவாரூர், மே 17 திருவாரூரில் மூன்று நாள்கள் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டத்திற்குப் பிறகு, கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் விவசாயப் பிரச்சினைகள் குறித்துப் பேசினார்.
அவரது பேட்டியின் முக் கிய விவரங்கள் பின்வருமாறு:
ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதே எங்களது முதன்மை நோக்கம். அந்த அடிப் படையில் தான் த.வெ.க. புதிய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அந்த ஆதரவு குறித்த தீர்மானம் திருவாரூர் மாநில குழு கூட்டத்தில் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதிய அரசின் செயல்பாடுகள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்புகிறோம். அரசின் செயல் பாட்டிற்கு ஏற்பவே எங்களது அணுகுமுறையும் அமையும்.
தி.மு.க. ஆட்சியில் நலத் திட்டங்கள்
கடந்த திமுக ஆட் சியில் எண் ணற்ற பல் வேறு நலத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன. தற்போதைய புதிய அரசு, அந்தத் திட்டங்கள் மட்டுமின்றி கூடுதலான நலத் திட்டங்களையும் செயல் படுத்த வேண்டும். நல்லாட்சி தர வேண்டும், என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தான் நாங்கள் ஆதரவு அளித்துள் ளோம்.
குதிரை பேரம் பற்றி நாங்கள் அறியாதவர்கள்; நாட்டின் நலன் தான் எங்களுக்கு முக்கியம். எனவே, அதுகுறித்து கருத்து எதுவும் கூற முடியாது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, சட்ட மன்றத்திலேயே நேரடியாகப் பதிலளிப்பதற்கு முதலமைச்சர் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும்.
சட்டம்தன் கடமையைச் செய்யும்
அதிமுகவில் வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப் பினர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து, அதில் ஒரு பிரிவினர் புதிய அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது குறித்து சட்டம் தன் கடமையைச் செய்யும் என நம்புகிறோம். இதுகுறித்து சட்ட வல்லுநர்கள் ஒன்று கூடி உரிய முடிவை எடுப்பார்கள்.
தற்போது மேட்டூர் அணையில் குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளது. எனவே, டெல்டா மாவட் டங்களில் குறுவை சாகுபடிக்குத் தேவையான நீரினைப் பெறு வதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாகத் தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு இந்திய கம்யூ னிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.
.png)
48 minutes ago
11






English (US) ·