சாதாரண டீக்கடை வைத்திருந்த ஓபிஎஸ்! மக்கள் பார்த்துட்டு இருக்காங்க! இறங்கி அடிக்கும் செல்லூர் ராஜு!

2 hours ago 17

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுகவிற்கு ஆதரவாகப் பேசும் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாகச் சாடியுள்ளார். ஓபிஎஸ்ஸுடன் இருக்கும் சிலரும் விரைவில் அதிமுகவிற்குத் திரும்பி விடுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மதுரை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளிக்கையில்: ஓ.பன்னீர்செல்வம் அதிமுக விட்டு சென்றுவிட்டார். சென்றவர்கள் என்ன பேசினாலும் அது எனக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. மக்கள் பார்த்துட்டு இருக்காங்க, அதிமுக தொண்டரும் பார்த்துட்டு இருக்காங்க, அதிமுகவில் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரிதான் என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீப காலமாக ஓபிஎஸ், திமுகவிற்கு ஆதரவாக பேசி வருகிறார். சாதாரண டீக்கடை வைத்திருந்தவரை சேர்மன், சட்டமன்ற உறுப்பினர், முதல்வர் என அழகு பார்த்தது அதிமுக கட்சிதான். பலமுறை நிதி அமைச்சர் அழகு பார்த்தது அதிமுக தான். இப்போது இந்த கட்சிக்கு குரல் கொடுக்காமல் இப்படி பேசுவதற்கு எனது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் எம்எல்ஏ ஐயப்பன் அவரா பேசுவது போல் தெரியவில்லை. அங்கு இருக்கிறவர்கள் சொல்லி பேசுகிறார்.

ஓபிஎஸ் இடம் தற்போது குறிப்பிட்ட ஒரு நான்கு, ஐந்து பேர் தான் இருக்கிறார்கள். அவர்களும் நம்மிடம் வந்து விடுவார்கள். தற்போது தான் அவரின் எண்ணம், பாதை அவர்களுக்கு தெரிந்துவிட்டது. அதனால் அவரிடம் இருக்கும் நான்கு, ஐந்து நபர்களும் தற்போது அதிமுகவுக்கு வந்துவிடுவர். அதிமுக கட்சி திமுக எதிர்ப்பு என்பது எங்கள் ரத்தத்தில் ஓடுகிறது. இன்று இருக்கும் சூழ்நிலையில் இவர்கள் வகித்த பதவி அதிமுகவால் தரப்பட்டது. உண்மையான அதிமுக தொண்டன் இப்படி பேச மாட்டார்.

அதிமுக கட்சி இல்லை என்றால் எப்படி இவர்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்க முடியும். மக்களிடையே அடையாளம் காட்டி இருக்க முடியும். ஓபிஎஸ் யார் என்பது எப்படி தெரியும் அவரை இந்த அளவுக்கு தெரிய வைத்தது அதிமுக கட்சிதான். செங்கோட்டையனை வளர்த்தது அதிமுக, பன்னீர்செல்வத்தை வளர்த்தது அதிமுக, எப்படி தற்போது இவர்கள் இப்படி பேசுகிறார்கள். செல்லூர் ராஜு யார் என்று, யாருக்கு என்னை எப்படி தெரியும். இந்த கட்சிதானே என்னை அறிமுகப்படுத்தியது. தற்போது எவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கிறேன் என்றால் அது அதிமுகவில் இருப்பதினால் தான். மூன்று முறை என்னை ஜெயிக்க வைத்தீர்கள் இரண்டு முறை அமைச்சராக இருந்தேன். அது அதிமுக கட்சியினால் தான் ஏற்பட்டது. என் உயிர் உள்ளவரை அதிமுகவில் தான் இருப்பேன் என கூறுவேன்.

என் தாயே தடுத்தாலும், ஆண்டவனே தடுத்தாலும் இயக்கத்தை இழிவாக பேசக்கூடிய யாராக இருந்தாலும் நான் இந்த நேரத்தில் சொல்கிறேன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என செல்லூர் ராஜு ஆவேசமாக கூறினார்.

Read Entire Article