Last Updated:Feb 21, 2026 6:22 PM IST
நம்பிக்கைக்குரிய நடிகையாக வலம் வந்த இவர் இப்போது தனது படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். தனது படங்கள் திரைக்கு வராததால் ஒரு இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறார்.

2013-ல் 'சுத்த தேசி ரொமான்ஸ்' படத்தின் மூலம் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் பரினிதி சோப்ராவுடன் இணைந்து அறிமுகமானவர் தான் வாணி கபூர். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து 2016-ல் ஆதித்யா சோப்ராவின் 'பெஃபிக்ரே' படத்தில் ரன்வீர் சிங்குடன் நடித்து பாலிவுட்டின் கிளாமர் குயினாக உருவெடுத்தார். இந்தப் படத்திற்கு அவரை பாலிவுட்டின் கனவுக்கன்னி எனக் கூறி ரசிகர்கள் கொண்டாடினர்.
ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராப் நடித்த இந்த மெகா ஹிட் படத்தில் நடித்ததன் மூலம் வணிக ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றார். ஆயுஷ்மான் குரானாவுடன் இணைந்து நடித்த இந்தப் படத்தில், பாலின அடையாளம் குறித்த சவாலான கதாபாத்திரத்தை ஏற்று விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். இதேபோல், அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.
வாணி கபூர் பாலிவுட்டில் அறிமுகமான அடுத்த ஆண்டே தமிழிலும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் நானியுடன் இணைந்து 2014ல் ஆஹா கல்யாணம் என்கிற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.
அதன்பின் இந்தி பக்கம் சென்றவர் தான் பல்வேறு ஹிட் படங்களில் நடித்தாலும் இப்போது ஒரு இக்கட்டான சிக்கலில் உள்ளார். துவக்கத்தில் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த வாணி கபூர், தற்போது திறமை இருந்தும் சூழ்நிலைகளால் தனது படங்கள் முடங்கியிருப்பதால் சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
அதாவது வாணி கபூர் நடித்துள்ள மூன்று முக்கியத் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு சிறிய ஊரில் பிறந்து வளர்ந்த பெண்ணை பற்றிய கதையை கொண்ட 'சர்வகுண் சம்பன்' என்கிற படத்தின் படப்பிடிப்பு 2023-லேயே முடிந்துவிட்டாலும், தகுந்த ஓடிடி தளம் அமையாததால் வெளியீடு தள்ளிப்போகிறது.
அபர்சக்தி குரானா மற்றும் பரேஷ் ராவலுடன் இணைந்து வாணி கபூர் நடித்த திரைப்படம் 'பத்தமீஸ் கில்'. 2024 நவம்பரிலேயே வெளியாக வேண்டியது. ஆனால், தயாரிப்பாளர்களால் இந்தப் படத்தை வாங்க சரியான விநியோகஸ்தர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கானுடன் வாணி கபூர் நடித்த திரைப்படம் 'அபீர் குலால்'. 2025 ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் கலைஞர்கள் மீதான எதிர்ப்பால் இந்தப் படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

”பாஜவிடம் ஏதோ வசமாக சிக்கியுள்ளார் ஈபிஎஸ்..” - ஆர்.எஸ்.பாரதி பேட்டி..
RS Bharathi Press Meet | EPS | ”பாஜவிடம் ஏதோ வசமாக சிக்கியுள்ளார் ஈபிஎஸ்..” - ஆர
RS Bharathi Press Meet | EPS | ”பாஜவிடம் ஏதோ வசமாக சிக்கியுள்ளார் ஈபிஎஸ்..” - ஆர
RS Bharathi Press Meet | EPS | ”பாஜவிடம் ஏதோ வசமாக சிக்கியுள்ளார் ஈபிஎஸ்..” - ஆர
.png)






English (US) ·