சிங்கப்பூருக்கான புதிய மலேசியத் தூதர்

1 hour ago 11

86f1d160-be13-4bf7-a370-328699aa5b78

மலேசியத் தூதர் அனிசான் சித்தி ஹாஜர் அத்னின். - படம்: பெர்னாமா

New Malaysian Ambassador to Singapore

On Tuesday, July 21, Malaysia's Ambassador to Singapore, Aneisan Sitih Hajar Adnin, presented her letter of credence to President Tharman Shanmugaratnam at the Istana. Ms. Sitih Hajar Adnin began her career in 1994, previously serving as Ambassador to Ireland (2017-18) and Canada (2021-23). On the same day, Dr. Abdulnasser Jamal Hussain Mohammed Alshaali, the United Arab Emirates Ambassador to Singapore, also presented his letter of credence to President Tharman Shanmugaratnam.

Generated by AI

சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் அனிசான் சித்தி ஹாஜர் அத்னின் தமது நியமனப் பத்திரத்தை, இஸ்தானாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) சமர்ப்பித்தார்.

இந்த நியமனத்திற்கு முன்னர் மலேசிய வெளியுறவு அமைச்சில் நிர்வாகச் சேவைகளுக்கான துணைத் தலைமைச் செயலாளராக அவர் பணியாற்றினார்.

வெளியுறவு அமைச்சில் கடந்த 1994ஆம் ஆண்டு தமது பணியை திருவாட்டி சித்தி ஹாஜர் அத்னின் தொடங்கியதாக ‘த ஸ்டார்’ இணையச் செய்தி குறிப்பிட்டது.

கடந்த 2017-18ஆம் ஆண்டில் அயர்லாந்துக்கான மலேசியத் தூதராகவும் 2021 முதல் 2023 வரை கனடாவுக்கான தூதராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அவர்.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேறொரு நிகழ்வில் சிங்கப்பூருக்கான ஐக்கிய அரபு சிற்றரசுகளின் தூதர் டாக்டர் அப்துல்நாசர் ஜமால் ஹுசைன் முஹம்மது அல் ஷாலியும் தமது நியமனப் பத்திரத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் சமர்ப்பித்தார்.

Read Entire Article