சிங்கப்பூருக்குள் வர தடை உள்ளோருக்கு அனுமதி மறுக்கும் விமான நிறுவனங்கள்

20 hours ago 8

a91f2624-9a3b-4ba8-a203-ab3693f6ad0e

அடுத்த ஆண்டிலிருந்து அறிமுகமாகும் புதிய நடைமுறை மூலம் நாட்டுக்குள் நுழைய அனுமதி இல்லாதோர் விமானங்களில் ஏறுவதிலிருந்து தடுத்து நிறுத்தப்படுவர். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூருக்குள் நுழைவதிலிருந்து ஏறக்குறைய 41,800 வெளிநாட்டினர் இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை தடுத்து நிறுத்தப்பட்டனர்.

குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட சோதனைகளை அடுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அடுத்த ஆண்டிலிருந்து அறிமுகமாகும் புதிய நடைமுறை மூலம் நாட்டுக்குள் நுழைய அனுமதி இல்லாதோர் விமானங்களில்கூட ஏறுவதிலிருந்து தடுத்து நிறுத்தப்படுவர்.

2026, ஜனவரியிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், எமிரேட்ஸ், டர்கி‌ஷ் ஏர்லைன்ஸ், ஏர் ஏ‌ஷியா ஆகிய விமான நிறுவனங்கள் புதிய நடைமுறையை அமல்படுத்தவிருக்கின்றன.

சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான தடை உள்ளோரை நிறுவனங்கள் அவற்றின் விமானங்களில் அனுமதிக்காது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கூடுதல் விமான நிறுவனங்கள் புதிய திட்டத்தில் இணையவிருப்பதாகச் சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.

இவ்வாண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் நாட்டுக்குள் நுழைவதிலிருந்து தடுத்து நிறுத்தப்போட்டோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 26 விழுக்காடு அதிகம் என்றும் 2023ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, அந்த எண்ணிக்கை 46 விழுக்காடு அதிகம் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

அதை அடுத்து புதிய திட்டம் நடைமுறைக்கு வருவதாக ஆணையம் சொன்னது.

ஆணையம் அறிமுகம் செய்த தீவிரமான சோதனைத் திட்டங்கள் மூலம் பல பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

மற்றவர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து நாட்டுக்குள் நுழைவோரைத் துல்லியமாகக் கண்டறியும் தானியக்கச் சோதனைத் தடங்கள் அவற்றுள் ஒன்று.

குற்றம் புரிந்தோர், சர்ச்சைக்குரியவர்கள், நாட்டுக்குள் நுழைய தடை உள்ளோர் ஆகியோரையும் அந்தக் கட்டமைப்பு கண்டறியும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

“ஏனோதானோ என்று பயணிகளை நாட்டுக்குள் நுழைவதிலிருந்து நாங்கள் தடுப்பதில்லை.

“அபாயம் உள்ளோர் தானியக்கத் தடங்களில் கண்டறியப்பட்டு கூடுதலாக விசாரிக்கப்படுகின்றனர்,” என்று ஆணையம் சொன்னது.

அத்தகையோரிடம் கூடுதல் விசாரணைகள் நடத்தப்பட்டு சிங்கப்பூருக்கு அவர்கள் வருவதற்கான உள்நோக்கங்கள் ஆராயப்படுகின்றன என்று அது குறிப்பிட்டது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகள் ஏற்கெனவே அத்தகைய நடைமுறையைப் பின்பற்றிவருகின்றன.

அவை விமான நிறுவனங்களுடன் இணைந்து அதிக அபாயமுள்ளோர் நாட்டுக்குள் வராமல் தடுப்பதன் மூலம் பாதுகாப்பை வலுப்படுத்துகின்றன.

Read Entire Article