Last Updated:May 11, 2026 4:06 PM IST
சிங்கப்பெண் திட்டம்: நெருக்கடி மிகுந்த பகுதிகளில் அதிகளவில் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற உடனே, தேர்தல் வாக்குறுதிப்படி பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான அரசாணையை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டார்.
அதில், முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் இந்த சிறப்பு அதிரடிப்படைக்கு ஐஜி தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு காவல் கண்காணிப்பாளர், இரண்டு டிஎஸ்பிகள், நான்கு ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள் 20 காவலர்கள் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து அந்த இடங்கள் கண்காணிக்கப்படும் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் விதமாக காவலர்களின் ரோந்து பணி மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கும் இடங்கள் உள்ளிட்ட நெருக்கடி மிகுந்த பகுதிகளில் அதிகளவில் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
சமூக நலத்துறை, கல்வித் துறை, அரசு சாரா தொண்டு நிறுனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட முகமைகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், சமூகத்தில் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து, பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Office | ரூ.333 சேமித்தால் ரூ.17 லட்சம் கிடைக்கும்!
RD திட்டத்தில் ஆண்டுக்கு 6.7% வட்டி, மாதம் குறைந்தது ரூ.100 முதலீடு.
ரூ.12 லட்சம் முதலீட்டுக்கு ரூ.17 லட்சம் கிடைக்கும்.
கடன் வசதி, முன்கூட்டியே முடிக்கும் சலுகை, நாமினி உரிமை வழங்கப்படுகிறது.
.png)






English (US) ·