சிங்கப்பூர் கடல் காப்பகத்தின் கவனிப்பில் எட்டு ஹாக்ஸ்பில் ஆமைக் குஞ்சுகள் உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Most endangered Hawksbill turtle hatchlings in Singapore.
Singapore residents can now see the critically endangered Hawksbill turtles. Eight Hawksbill hatchlings, whose eggs were found on Kusu Island, are under the care of the Singapore Oceanarium. Only one in 1,000 sea turtle hatchlings typically survives to adulthood due to threats like predation and pollution. Turtle eggs found on Singapore beaches are often transferred to the National Parks Board's Marine Park Station at Sisters' Islands for hatching. Officials stated these specific eight hatchlings came from eggs laid on Singapore beaches in 2025.
Generated by AI
சிங்கப்பூர்வாசிகள் உலகின் மிகவும் அருகிவரும் ‘ஹாக்ஸ்பில்’ ஆமைகளை இனி நேரடியாகக் காணலாம்.
சிங்கப்பூர் கடல் காப்பகத்தின் கண்காணிப்பில் இந்த எட்டு ‘ஹாக்ஸ்பில்’ ஆமைக் குஞ்சுகள் உள்ளன. இவை முதலில் குசு தீவில் (Kusu Island) இடப்பட்ட முட்டைகளிலிருந்து பொரித்தவை ஆகும்.
பொதுவாக 1,000 கடல் ஆமைக் குஞ்சுகளில் ஒன்று மட்டுமே பெரிதாக வளரும். பெரும்பாலானவை குஞ்சுகளாக இருக்கும்போது விலங்குகளால் வேட்டையாடப்படுவது, தூய்மைக்கேடு போன்ற பிரச்சினைகளால் இறந்துவிடுகின்றன.
சிங்கப்பூர் கடற்கரைகளில் இடப்படும் ஆமை முட்டைகள் சிஸ்டர்ஸ் தீவு கடல் பூங்காவிற்கு மாற்றப்படும். அங்கு முட்டைகள் பொரிப்பதற்கேற்ற சூழல் உருவாக்கித் தரப்படும். கடல் பூங்கா தேசியப் பூங்காக் கழகத்தின் கீழ் உள்ளது.
தற்போது உள்ள எட்டு ஆமைக் குஞ்சுகளும் 2025ஆம் ஆண்டு சிங்கப்பூர் கடற்கரைகளில் இடப்பட்ட முட்டைகளிலிருந்து பொரித்தவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
.png)








English (US) ·