Last Updated:October 13, 2025 9:32 PM IST
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் அரசன் படத்துடைய படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு – வெற்றிமாறன் இணையும் அரசன் படத்தில் நடிக்கவுள்ள முன்னணி நடிகர் கொடுத்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் இணைவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக வெற்றிமாறன் நடிகர் சிம்பு படத்தை இயக்க உள்ளார். இந்த படம் வடசென்னை படத்தின் கிளைக் கதையாக அமையும் என்று வெற்றிமாறன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் வெற்றிமாறன் தன்னுடைய சினிமாட்டிக் யூனிவர்ஸை உருவாக்கியுள்ளார். வடசென்னை திரைப்படம் ஏற்கனவே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் சிம்பு நடிக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் அந்த படத்திற்கு அரசன் என தற்போது டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் வெற்றிமாறனுடன் முதன்முறையாக அனிருத் இணைய உள்ளார். அரசன் படத்துடைய ப்ரோமோ அனிருத் பிறந்தநாள் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா அல்லது கிச்சா சுதீப் முக்கிய கேரக்டரில் நடிப்பார்கள் என சமீபத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அரசன் படத்தில் கிச்சா சுதீப் இணைவார் என்று தற்போதைய தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஏற்கனவே இவர் தாணு தயாரிப்பில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், நெல்சன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். படத்தின் ஹீரோயின் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.
First Published :
October 13, 2025 9:32 PM IST