சென்னை உட்பட தமிழகத்தில் இன்று முதல்.... தீபாவளியன்று மழை எப்படி?

3 hours ago 15

Last Updated:October 14, 2025 10:37 AM IST

TN Rain | தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பத் தொடங்கியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மழை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் நியூஸ்18 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

 சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான சேலையூர், முடிச்சூர், வண்டலூர் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி பள்ளி, கல்லூரி மற்றும் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் அவதிக்குள்ளாகினர்.

 இதற்கிடையே, தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 அதேபோன்று திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இந்நிலையில் சென்னையில் இன்று தொடங்கும் மழை நாளை முதல் 4 நாட்களுக்கும் தீவிரமாகும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று 3 செ.மீ வரை மழைப்பொழிவு இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான கடற்கரை பகுதிகளில் இன்று முதல் மழை தீவிரமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக பிரதீப் ஜான் நியூஸ்18 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "கடந்த ஒரு வாரமாக உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. மேற்கு திசை காற்றானது இன்று முதல் கிழக்கு திசையில் அதாவது கடற்பகுதிகளில் வீசுகிறது. இதனால் இன்று காலையே கடலோர மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது.

 இன்று முதல் கடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும். நாளை காலை முதல் கிழக்கு காற்று அதிகமாக இருக்கும் என்பதால், கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் விட்டு விட்டு மழை தீவிரமாகும்.

 17, 18ம் தேதி வரைக்கும் இது நீட்டிக்கும். அதுவரை இந்த மழை தொடரும். புயலாக இல்லையென்றாலும் தொடர் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. 18ம் தேதி பெய்யும் தீவிரமான மழை தீபாவளி தினத்தன்று பெய்ய வாய்ப்பில்லை என்றாலும், தீபாவளி தினத்திலும் மிதமான மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது.

 அடுத்து வரும் நாட்களில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி இல்லையென்றாலும் மிதமான மழை தொடங்கி அது தீவிரமாகும். அதனை தொடர்ந்து பருவமழை தொடங்கியதாக அறிவிக்க வாய்ப்பிருக்கிறது" என்று விரிவாக பேசினார்.

Read Entire Article