Last Updated:Dec 21, 2025 7:27 AM IST
சென்னையில் நியூஸ் 18 தமிழ்நாடு மற்றும் பீ-ரைட் நடத்தும் ’நம்ம ரன்’ மாரத்தானை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்; ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி முன்னெடுப்பில் சென்னையில் நடைபெறும் மாரத்தான் போட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.
உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் பீ-ரைட் நிறுவனம் இணைந்து சென்னையில் 'நம்ம ரன்' என்ற தலைப்பில் மாரத்தான் போட்டியை நடத்தி வருகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைவரும் பங்கேற்கும் வகையில், பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது.
இதையொட்டி, அதிகாலையில் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் சுவாமி சிவானந்தா சாலையில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். காலை 5.45 மணியளவில் இளையோருக்கான 5 மற்றும் 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதில், ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓடினர். சிவானந்தா சாலையில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம் வழியாக கலங்கரை விளக்கம் வரை சென்று மீண்டும் சிவானந்தா சாலையில் நிறைவடைய உள்ளது.
முன்னதாக, மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மாரத்தானில் சிறுவர்கள் அதிகளவில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி இந்த முன்னெடுப்பை எடுத்ததற்கும் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு திருவள்ளுவர் சிலையை நியூஸ் 18 தொலைக்காட்சியின் தென் மண்டல நிர்வாக ஆசிரியர் விவேக் நினைவுப் பரிசாக வழங்கினார்.
Location :
Chennai [Madras],Chennai,Tamil Nadu
சென்னையில் 'நம்ம ரன்' மாரத்தான் போட்டி.. நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் அமைச்சர் தொடங்கி வைப்பு!
.png)






English (US) ·