“நான் இடும் கட்டளை எதுவாயினும், ஏற்று நடக்கக்கூடிய தம்பி பூபதி” என முத்தமிழறிஞர் கலைஞர் போற்றிய தஞ்சை உடன்பிறப்பு, பூபதி/ ‘தஞ்சையில் பூபதியின் ராணுவப்படை எனக்குப் பாதுகாப்பு அளிக்கும். அதனால், நான் எதையும் துணிச்ச லாகப் பேசுவேன்’ எனக் கழக முன்னோடி வெற்றி கொண்டான், கழகத் தலைவர் முத்தமிழறிஞர் முன்னிலையில் பாராட்டிய கழக உடன்பிறப்பு, தஞ்சையில் எதற்கும் அஞ்சாத சிங்கம் எனப் பெயரெடுத்த கழகத் தளகர்த்தர்.
1953-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தவர். தஞ்சை கீழராஜ வீதியில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோர் நமச்சிவாயம்-வாசம்பாள். தஞ்சை வீரராகவா பள்ளியில் உயர்நிலைக் கல்வியும், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் பி.யூ.சி பட்டமும் பெற்றவர். பள்ளியில் படிக்கும் காலத்தில், அவருக்கு ஆசிரியராக இருந்தவர், தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் முன்னோடி துறவி இளங்கோவன் அவர்கள். அவரது அரசியல் பாடமும் பயிற்சியும் பூபதி அவர்களுக்குத் தூண்டுகோலாகவும் வழிகாட்டுதலாகவும் அமைய அவரது 18 வயது காலகட்டத்திலேயே, தஞ்சையில் கலைஞர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கியவர்.
உடற்கல்வி ஆசிரியராகக் கழகப் பணி
அந்த அரசியல் ஆர்வம் உருவாகிய காலத்தில், பூபதி அவர்களின் உறவினரும், மொழிப்போர் களத்தின் தளபதியுமாகத் திகழ்ந்த எல்.கணேசன் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கலானார். தஞ்சாவூர் ரயில்வே நடுநிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியில் சேர்ந்த அவர், 25 வயதிலிருந்து முழுவீச்சாகக் கழகப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார். 1978 ஆம் ஆண்டில் அவரின் மூத்த சகோதரிக்கு, தஞ்சையில் கழகத் தலைவர் கலைஞர் தலைமையில், கழக முன்னோடிகள் கலந்துகொண்ட திருமணவிழா, அவரது அரசியல் வாழ்க்கையிலும் பல திருப்புமுனைகளைக் கொண்டுவந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அரசுப் பணியிலிருந்து வெளியேறி, முழுநேரமாகக் கழகப் பணிகளில் ஈடுபடலானார்.
1981-ஆம் ஆண்டில், தஞ்சை நகரக் கழகத் துணைச் செயலாளராக அமைப்புத் தேர்தலில் வெற்றிபெற்று, கழகத்தினரின் நம்பிக்கையைப் பெற்ற இளைஞராகத் திகழ்ந்தார். 1980-ஆம் ஆண்டில் இளைஞர் அணி தொடங்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் இளைஞர் அணியைக் கொண்டுசேர்க்கும் பணியில், இன்றைய கழகத் தலைவர் ஈடுபட்ட நாட்களில், அன்பில் பொய்யாமொழி, கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா ஆகியோரை அழைத்துவந்து, தஞ்சை மாவட்டம் முழுவதும் கழக அணியை வலுவாக்குவதில் முன்னணியில் நின்றார்.
நகரச் செயலாளராக…
1984-ஆம் ஆண்டில் நஞ்சை நகரச் செயலாளர் எஸ்.நடராசன் அவர்கள் மறைந்தபோது, துணைச் செயலாளராக இருந்த பூபதியை நகரச் செயலாளராக நியமித்தார் கலைஞர். அவர் நகரச் செயலாள ராக இருந்த மூன்றாண்டுக்காலம், தமிழ்நாட்டு அரசியலில் கழகம் பல வீச்சான போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருந்தது.
ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம், ஹிந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் தஞ்சை நகரத்தை முன்னணி போராட்டக் களமாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர் தஞ்சை பூபதி. தஞ்சையில் பெத்தண்ணன், ஏ.வி.பதி, சுல்தான், டி.கே.கோவிந்தன், எஸ்.என்.எம். உபயதுல்லா எனப் பல முன்னோடிகளுடன் இணைந்து பயணித்தவர். இவர் நகரச் செயலாளராக இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தஞ்சையின் 36 வார்டுகளிலும் கழகத்தினரை வெற்றிபெற வைத்து, கலைஞரிடம் கொண்டுவந்து நிறுத்தினார்.
1988-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தஞ்சையில் காவிரி நதிநீர் தொடர்பான அறப்போரினைக் கலைஞர் முகாமிட்டு வீச்சாக நடத்திய நேரத்தில், தஞ்சை நகரமே போர்க்களமாக இருந்தது. அங்கு நடைபெற்ற மாபெரும் பேரணியில், கலைஞருடன் நடைபோட்டு நம்பிக்கை பெற்ற கழகத்தினராக வளர்ந்து வந்தார்.
1993-ஆம் ஆண்டு, கழகத்துக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில், கழகக் கொடிக்கும். சின்னத்துக்குமான நீதிமன்றப் போராட்டம் உச்ச நீதிமன்றத்தில் நடத்திக்கொண்டிருந்தது. கழகம். அப்போது உச்ச நீதிமன்றத்தில் பார்வைக்கு கழகத்தின் நிகழ்ச்சி நிரல் ஏடுகளை ஆவணங்களாகக் கொண்டு சென்றது. அந்த முடிவினை எடுத்த நிகழ்வாக தஞ்சையில் நடைபெற்ற பொதுக்குழு நிகழ்ச்சி கழக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அப்போது, கழக முன்னோடி கோ.சி.மணி அவர்களின் ஏற்பாட்டில் தஞ்சையில் அந்த நிகழ்ச்சியை நடத்த, உறுதுணையாக நின்று அயராது பாடுபட்டவர் பூபதி.
1996-ஆம் ஆண்டில், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராகத் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாமல் மாற்றப்பட்டார். ஆனாலும், கழகமும் கலைஞரும் எப்போதும் அவரது உயிருக்கு திகரானது என்பதில் என்முனையளவும் மாற்றமில்லாமல் வேலை செய்தவர். அதே ஆண்டு, சென்னையில் இன்றைய கழகத் தலைவர் அவர்கன் மேயர் வேட்பாளராகப் போட்டியிட்டபோது, குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து வந்து தேர்தல் பணியாற்றி, தலைவரின் கவனம் ஈர்த்தார்.
நகர்மன்றத் துணைத் தலைவராக….
2001-ஆம் ஆண்டில், உள்ளாட்சித் தேர்தல் தஞ்சை நகரத்தைக் கைப் பற்றி, சுல்தான் அவர்கள் நகர்மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றபோது, மூன்றாவது முறையாக நகர்மன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பூபதி அவர்கள், நகர்மன்றத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். கலைஞரின் ஆட்சிக்காலத்தில், தஞ்சை நகர்மன்றத் தைக் கைப்பற்றிய கழகம், மக்கள் பணிகளைக் கொண்டு வந்து சேர்த்தது.
2006-ஆம் ஆண்டில், தனது 52-வது வயதில் எதிர்பாராத விதமாக அவர் இயற்கை எய்தியபோது, “எதற்கும் அஞ்சாத சிங்கம் ஒன்றை தஞ்சையில் நான் இழந்தேன்” என்று முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய இரங்கல் அறிக்கை, தஞ்சை நகரத்தின் துயரத்தை எதிரொலித்தது. திராவிடர் கழகத்தினரோடும் தோழமை கொண்டு பயணித்த பூபதியின் நினைவாக, திராவிடர் கழகத்தின் சார்பில், ‘தஞ்சையில் படிப்பகம்’ ஒன்றும் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1983-ஆம் ஆண்டில், பூபதி அவர்களின் மணவிழாவை நடத்திவைத்த முத்தமிழறிஞர் கலைஞர், “தம்பி பூபதி, கழகப் பணிக்கு 16 மணி நேரமும், எட்டு மணி நேரத்தை வீட்டிற்கும் ஒதுக்கிட வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார். நேரங்காலம் பார்க்காமல் கழகத்துக்காக ஓடியாடி உழைத்தவர் என்ப தை, அன்று கழகத் தலைவரின் உரையில் சுட்டியது. அப்படி நேரம் காலம் பார்க்காமல் உழைத்தவரின் தொண்டினை நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்திருந்த கலைஞர், 2016- ஆம் ஆண்டு, பூபதி அவர்களின் மகள் அஞ்சுகம் அவர்களுக்குச் சட்டமன்றத் தேர்தலில் கழக வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினார். அவர் வெற்றி வாய்ப்பை இழந்தநிலையில், 2022 உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சை துணை மேயராகும் வாய்ப்பினை வழங்கினார் இன்றைய கழகத் தலைவர் அவர்கள். தந்தை வகித்த பொறுப்பில் மகளை அமரவைத்து, கழக முன்னோடியின் தொண்டினை உணர்வுபூர்வமாகக் கடத்திக் கொண்டிருக்கிறது கழகம்.
நன்றி: ‘முரசொலி’, 7.5.2026
.png)
1 hour ago
12





English (US) ·