தண்ணீர் பிரச்சனை முடிஞ்ச சூட்டோடு இப்போ சாப்பாடு பிரச்சினை... பாருவால காண்டான கனி அக்கா...

9 hours ago 9

Last Updated:October 13, 2025 7:43 PM IST

Bigg Boss 9: சமையல் கட்டுல கமுக்கமா வேலையை பாத்துட்டு இருந்த கனி அக்கா இன்னைக்கு பாரு மேல சீறும் ப்ரோமோவால் எபிஸோடுல என்ன நடக்குமோன்னு மக்கள் ஆர்வமா இருக்காங்க.

தண்ணீர் பிரச்சனை முடிஞ்ச சூட்டோடு இப்போ சாப்பாடு பிரச்சினை... பாருவால காண்டான கனி அக்கா...
தண்ணீர் பிரச்சனை முடிஞ்ச சூட்டோடு இப்போ சாப்பாடு பிரச்சினை... பாருவால காண்டான கனி அக்கா...

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வெற்றிகரமாக ஒரு வாரத்தைக் கடத்திய நிலையில் விஜய் சேதுபதி சந்திப்பு முடிந்து ஞாயிற்றுக்கிழமையுடன் தண்ணீர் பிரச்சினை முடிவுக்கு வந்தது. என்னடா இது எண்டர்டெய்ன்மெண்ட் மிஸ் ஆகிடுமோன்னு நினைப்பதற்குள் சூட்டோடு சூடாக சாப்பாட்டை வைத்து அடுத்த சண்டையைத் துவங்கியது ப்ரோமோ காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

சாப்பாடு அளந்து வைப்பதால் புதிய சர்ச்சை கிளம்பியது. "பவுலில் சாப்பாடு வைப்பதில் யாருக்கு விருப்பமில்லை" என சபரி கேட்கிறார். அதற்கு திவாகர் "இப்படி பவுலில் சாப்பாடு அளந்து வைப்பதால் அது யாருக்கும் பத்தாது" என கோபத்துடன் தெரிவிக்கிறார். இடையில் வினோத் வந்து "மீதமானால் சாப்பிட்டு கொள்ளலாம்" என்று கூறுகிறார்.

அதற்கும் திவாகர், "அப்போ எப்படி சாப்பிட தோனும் பசி இருக்கும் போது தான் சாப்பிட தோனும்" என்று கூறுகிறார். அதற்கு சபரி "நீ சாப்பிட்டல ஆனா இன்னும் ஏழு பேர் சாப்பிடாம‌ இருக்காங்க"ன்னு கத்துகிறார். அதற்கும் திவாகர் "பர்சனல் வென்சன்சை சாப்பாட்டில் தான் காட்டுகிறார்கள்" என கோபமாக வெடிக்கிறார்.

அடுத்த ப்ரோமோவில் விஜே பார்வதிக்கும், கனிக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. விஜே பார்வதி கிட்சன் டேபிளில் ஏறி அமர்ந்திருந்தார். அவரை கீழே இறங்குமாறு துஷார் சொல்ல பார்வதி முடியாது என்று சொல்லி டேபிளிலேயே அமர்ந்திருந்தார்.

அதன்பிறகு வந்த கனி, "சூப்பர் டீலக்ஸ் வீட்டாரருக்கு எந்த கொம்பும் முளைக்கல. நீங்க அநியாயமா ஒரு விஷயம் பண்ணுவிங்க. அதை யாரும் கேட்கக்கூடாதா? அப்படியே நாங்க கேட்டாலும் உங்களை கார்னர் பண்றோம்னு சொல்லி சீன் போடுவிங்க. அதை பார்த்திட்டு யாராலையும் அமைதியா போக முடியாது. நல்ல அறிவு இருக்குறவுங்களுக்கு ஒரு விஷயம் சொன்னா புரியும். உங்க கிட்ட பேசுறது செவுத்துகிட்ட பேசுற மாதிரி தான் இருக்கு" என பார்வதியை பார்த்து கோபமாகக் கனி பேசுகிறார்.

மூன்றாவது ப்ரோமோவில், "பார்வதி மற்றும் திவாகர் அமர்ந்து துஷார் மற்றும் கனியை பற்றி பேசிக் கொண்டு இருக்கின்றனர். "துஷார் அப்சர்வ் செய்த ஆக்டிவிட்டீஸ்களை வைத்து எனக்கு வெஷல் வாஷிங் கொடுத்திருக்காங்க என பாரு கூறுகிறார். அதற்கு திவாகர் "அப்படியெல்லாம் துஷார் கிடையாது, ஆள் பார்த்தது தான் பண்றான். துஷாரை விட இனி அடுத்து வரவங்க ரொம்ப மோசமா இருப்பாங்க" என கூறுகிறார்.

மேலும் பார்வதி "ஏதோ ஒரு விஷயம் கனி அக்காவிடம் இடிக்குதே என்று நினைத்தேன். ஆனால் கனி அக்கா பயங்கர கால்குலேட்டிவ்வா தான் இருக்கிறாங்க" என இருவரும் மாறி மாறி மற்றவர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனைப் பார்த்த மக்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஒரு விரிசல் ஏற்படுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.

First Published :

October 13, 2025 7:35 PM IST

Read Entire Article