கீழடி அருங்காட்சியகத்தைக் காண பிரதமருக்கு அழைப்பு விடுத்தார் முதல்வர் ஸ்டாலின். - படம்: தமிழ் முரசு
தமிழகத்தின் தொன்மை நாகரிகத்தை உலகறியச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகங்களைப் பார்வையிட வருமாறு பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.356 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அப்போது உரையாற்றிய அவர், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்துச் சில முக்கியக் கேள்விகளை எழுப்பினார். “கடந்த 2021ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகி நீண்ட காலம் கடந்தும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது”.
அதே வேளையில், தமிழக அரசு மிகக்குறுகிய காலத்தில் உலகமே வியக்கும் வகையில் ‘பொருநை அருங்காட்சியகத்தை’ கட்டி முடித்துள்ளதை அவர் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார்.
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் மண்ணிலிருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துவதாக முதல்வர் தெரிவித்தார். ஒவ்வொரு தமிழரும் தங்களது குடும்பத்துடன் இந்த அருங்காட்சியகங்களுக்குச் சென்று நம் முன்னோர்களின் வாழ்வியலைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
.png)




English (US) ·