தமிழ்த்தாய் வாழ்த்தில் அலட்சியம்; ஜோதிடருக்கு அரசுப் பதவி! தமுஎகச விமர்சனம்

1 hour ago 17

சென்னை, மே 13 தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு, தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்தது மற்றும் ஜோதிடரை அரசுப் பதவியில் நியமித்தது ஆகிய நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவமதிப்பு

“நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவதே சரியான மரபு.

மேலும், மத ஒருமைப்பாட்டுக்கு எதிரான ‘வந்தே மாதரம்’ பாடல் நிகழ்வின் தொடக்கத்திலும் இறுதியிலும் என இருமுறை பாடப்பட்டது குறித்துப் புதிய அரசு தமிழ் மக்களிடம் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான
ஜோதிடர் நியமனம்

முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ‘ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்’ என்னும் ஜோதிடரை நியமித்துள்ள அரசின் முடிவையும் தமுஎகச வன்மையாகக் கண்டித்துள்ளது.

“கடந்த கால அரசுகள் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்ற வில்லையே தவிர, ஒருபோதும் மூடநம்பிக்கையை வளர்ப்பவர்களை அதிகாரப்பூர்வமாக உயர் பொறுப்பு களில் நியமித்ததில்லை. முதல மைச்சர் விஜய் தான் ஒரு மதச்சார்பற்ற அரசை நடத்துவோம் என்று அளித்த வாக்குறுதிக்கு இந்த நடவடிக்கை முற்றிலும் எதிராக உள்ளது. இது அவருக்கு வாக்களித்த மக்களுக்கும் ஆதரவளித்த கட்சிகளுக்கும் ஏமாற் றத்தைத் தந்துள்ளது” என்று அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Entire Article