தமிழ்நாடு அரசியலை தலைகீழாக்கிய வெறும் 4,649 வாக்குகள் ... என்ன காரணம் தெரியுமா?

1 hour ago 11

Last Updated:May 12, 2026 9:55 PM IST

தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் எவராலும் ஊகிக்க முடியாதவை

தமிழ்நாடு நட்சத்திர தொகுதி
தமிழ்நாடு நட்சத்திர தொகுதி

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஐயுஎம்எல் உள்ளிட்ட திமுக தோழமை கட்சிகள் கொடுத்த ஆதரவு அடிப்படையில் புதிய ஆட்சியை அமைத்தது.

காங்கிரஸ் கட்சி தவெக அமைச்சரவையில் பங்கேற்க உள்ளது. அடுத்து வரும் உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தலிலும் தவெக உடனான கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்தது. இதன் காரணமாக, திமுகவுடனான கூட்டணி முறித்துக்கொண்டது. விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் தற்சமயம் புதிய ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இருப்பினும், அரசியலில் நாளை என்ன நடக்கும் என்பதை எவராலும் ஊகிக்க முடியாது. தவெக அமைச்சரவையில் விசிக பங்கு கொள்வதா வேண்டாமா என்பது குறித்த நிலைப்பாட்டை இரண்டு வாரங்களுக்கு அறிவிப்பதாக அதன் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இது ஒருபுறமிக்க, தவெக ஆட்சியில் பங்கெடுப்பது தொடர்பாக தமிழ்நாட்டின் பிரதான கட்சியான  அதிமுகவுக்குள் பெரும் சர்ச்சைகள் உருவாகியுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் சுமார் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் முதலமைச்சர் விஜய்யின் அரசுக்கு தங்களது ஆதரவை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இன்று, விஜய்யும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணியை நேரில் சந்தித்து பேசினார். மறுபுறம், இபிஎஸ் தரப்பில் சுமார் 22 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்கக் கோரி அதிமுக அதிகாரப்பூர்வ கொறடா எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உத்தரவை பிறப்பித்துள்ளார்.


VIJAY HAS HAD TO FALL BACK ON "BACK STABBERS" AND "REBELS" TO FORM GOVERNMENT Only because he fell short of majority by 4,649 Votes. YES JUST 4,649 VOTES!


A closer look at the data reveals an interesting reality: a mere 4,649 additional votes, strategically placed across 10… pic.twitter.com/7XLPJaxMnq

— Rahul Shivshankar (@RShivshankar) May 12, 2026

தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் எவராலும் ஊகிக்க முடியாதவை. காங்கிரஸ் கட்சி தவெக அமைச்சரவையில் இணைய முடிவெடுத்ததும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளும் தற்போதைய அரசியல் விவாதங்களின் மையப்புள்ளியாக உள்ளன.

தமிழக அரசியலில் இத்தகைய தலைகீழ் மாற்றங்களுக்கு பின்னால் இருப்பது தவெக தவறவிட்ட 4,649 வாக்குகள் தான். தேர்தல் புள்ளிவிவரங்களின்படி, தவெக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்ட அந்த 10 தொகுதிகளில், மொத்தமாக 4,649 வாக்குகளை கூடுதலாகப் பெற்றிருந்தால், அக்கட்சி 118 இடங்களுடன் அறுதிபெரும்பான்மையைப் பெற்றிருக்கும். அவ்வாறான ஒரு சூழல் அமைந்திருந்தால், தவெக மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயம் ஒருவேளை ஏற்பட்டிருக்காது. இன்று நாம் காணும் இந்த அரசியல் மாற்றங்களும் இதே தன்மையோடுநிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

மறைமுகமாக, இந்த மிகச்சிறிய வாக்கு வித்தியாசமே தமிழகத்தின் தற்போதைய அதிகாரப் பகிர்வையும், கட்சிகளுக்கு இடையிலான புதிய உறவுகளையும் தீர்மானித்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

Read Entire Article