தமிழ்நாடு அரசு வேலை: `கிராம செயலாளர்' பணிக்கான அறிவிப்பு வெளியீடு - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

22 hours ago 13

தமிழ்நாடு அரசு வேலை: கிராம செயலாளர் வேலை. மொத்த காலிபணியிடங்கள் 1,483. ரூ.50,000 வரை சம்பளம் - முழு விவரத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Published:25 mins agoUpdated:25 mins ago

தமிழ்நாடு அரசு | வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு | வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன பணி?

கிராம ஊராட்சி செயலாளர்.

மொத்த காலிபணியிடங்கள்: 1,483

வயது வரம்பு: 18 - 32 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.16,900 - 50,400

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப்தாரர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு வரை தமிழ் மொழி படித்திருக்க வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு | வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு | வேலைவாய்ப்பு

இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: tnrd.tn.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 9, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Read Entire Article