பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம் நடை பெற்றது. அதன் விவரம் வருமாறு:
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை நில அளவையர் சங்கக் கட்டட அரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை என்ற நூல் அறிமுக விழா நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ப.க.மாவட்டத் தலைவர் இரா.மலர்மன்னன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா.வெள்ளைச்சாமி அனைவரையும் வரவேற்றார்.
திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாநகரத் தலைவர் அ.தர்மசேகர், மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், ஒன்றியச் செயலாளர் பு.ஆம்ஸ்ட்ராங், மாவட்டத் துணைச் செயலாளர் ரெ.மு.தருமராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.சரவணன் தொடக்கவுரையாற்றினார்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கழகத் தலைவர் ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை என்ற நூலை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். நூலை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலச் செயலாளர் மன்றம் சண்முகநாதன் பெற்றுக் கொண்டு வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் அண்மையில் தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளியானது. இது குறித்து அண்டை மாநிலங்களிலும் அயல்நாடு களிலும் அனைவரும் விமர்சனம் செய்தார்கள். அந்தளவுக்கு தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை மாறிக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியாருக்குப் பின் தமிழ்நாட்டில் தமிழர் தலைவர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால்தான் இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாட்டில் நுழைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. பாஜக இன்றைக்கும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத நிலையில் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ஆசிரியர் அவர்களின் அயராத பணிதான். தமிழ்நாட்டில் பகுத்தறிவாளர் கழகத்தில் எங்கள் மன்ற உறுப்பினர்களான தர்மசேகர், சரவணன், வெள்ளைச்சாமி போன்ற ஆசிரியர்கள் சேர்ந்து தந்தை பெரியார் வழியில் நின்று சமுதாயத் தொண்டு செய்கிறார்கள் என்றால் எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது. அவர்களையெல்லாம் திராவிடர் கழகம் வழி நடத்துகிறது. அவர்களைப் போல் நாம் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
நூலை அறிமுகப் படுத்தி சிறப்புரையாற்றிய கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பேசுகையில், பாஜகவில் அடையாளப் படுத்தப் பட்டவர்கள் அடல்பிகாரி வாஜ்பாய் முதல் அனைவரும் பார்ப்பனர்கள். ஆனால் நாங்களும் இந்துக்கள்தான் என்று முன் வந்து சொல்லிக் கொள்பவர்கள் நரேந்திர மோடி போன்றவர்கள். ஆர்.எஸ்.எஸூம் பாஜகவும் இந்துக்களுக்கானது என்று பம்மாத்துக் காட்ட முயற்சிக்கிறார்கள். பிற்படுத்தப் பட்டவர்கள் எல்லோரையும் அவர்களுக்கானவர்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனர்கள் அல்லாதோரை அவர்களுக்கு ஆதரவாளர்கள் என்று காண்பிக்கிறார்கள். ஆனால் இது பார்ப்பன சூழ்;ச்சி. விவேகானந்தர் தொடங்கி பகத்சிங் வரை அவர்களை இந்துக்களாகச் சித்தரிக்க முயன்றார்கள். அது முடியவில்லை என்பதோடு அவர்களால் தோற்கடிக்க முடியாத ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்.
பல்வேறு காலக்கட்டங்களிலும் சிலீப்பர் செல்களை அனுப்ப முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் தந்தை பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவர்கள் பெரியார் கொள்கை பேசுபவர்களாக மாறினார்கள் என்பதுதான் வரலாறு. அம்பேத்கரையும் மாற்ற முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. அவர் 22உறுதிமொழிகளை அறிவித்ததில் இந்து மதத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதும் முக்கியமான அறிவிப்பாகும். அதனால் அவர்களால் அறிவிக்க முடியவில்லை. அதனால்தான் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முடியவில்லை. அவர் வெறும் படமாக இல்லை. பாடமாக இருக்கிறார் என்பதை பல நேரங்களிலும் வெளிப்படுத்தியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
இந்தியாவை மிகப் பெரிய ஆபத்து சூழ்;ந்திருக்கிறது. அது குறித்து தொடர்ந்து ஒருமாத காலமாக ஆசிரியர் எழுதி வருகிறார். ஒன்றிய அரசில் ஏற்கனவே இருந்த வேகம் இப்போது இல்லை. அதற்குக் காரணம் திராவிடர் கழகம்தான். 2024இல் இந்து ராஷ்டிரீயத்தை உருவாக்க முயன்றனர். கட்சிகளை உடைத்து அவர்களது ஆட்சியை உருவாக்க நினைத்தார்கள். இது மாநிலங்களில் ஏற்படும் ஆட்சி மாற்றங்கள் அல்ல, அதைக் கொண்டு மத்தியில் தங்களைப் பலப்படுத்திக் கொண்டு பாஜகவை வலிமைப் படுத்தும் தந்திரமாகவே இதைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றையெல்லாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்த நூலின் மூலம் பல ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நூலை வாங்கி அரசியல் நுட்பங்களைப் படித்தறிந்து கொள்வதுடன் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி தந்தை பெரியாரின் கருத்துகளைப் பரப்பும் முயற்சியில் நாம் அனைவரும் இறங்க வேண்டும் என்றார்.
தஞ்சாவூர்
பெரியார் பேசுகிறார் தொடர் – 107 சிறப்புக்கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆர். எஸ். எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா 18.07.2026 அன்று மாலை 6.00 மணி அளவில் தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடைபெற்றது.
தொடக்கத்தில் பெரியார் செல்வம். கலைச் செல்வி, பாவலர் பொன்னரசு பகுத்தறிவுப் பாடல்களை பாடினர் இக்கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.அழகிரி தலைமை ஏற்றார், மாவட்டச் செயலாளர் பாவலர் பொன்னரசு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார், திராவிடர் கழக மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், மாவட்டச் செயலாளர் அ. அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல் தொடக்க உரையாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் எழுதிய ஆர். எஸ் .எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூலை அறிமுகம் செய்து பகுத்தறிவாளர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் மு.சு.கண்மணி மிகச் சிறப்பாக 13 தலைப்புகளிலும் துணுக்கு செய்திகளாக விரிவாக உரையாற்றினார்.
நூலினை திராவிடர் கழக கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், பெரியார் சமூக காப்பணி இயக்குநர் தே. பொய்யாமொழி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா. வெற்றிகுமார், மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன், மாநகரத் கழக தலைவர் செ.தமிழ்ச்செல்வன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் இரா. காசிநாதன், கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மா. இராமசாமி, தி.மு.க. தஞ்சை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணித் தலைவர் முனைவர் செல்வ. கலைமணி, உலகத் தமிழர் கழகம் தஞ்சை மாவட்டத் தலைவர் குறள்வழி இராம.சந்திரசேகரன், அரசு இலக்கிய முற்றம் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ப.திருநாவுக்கரசு, சிமியோன், தீந்தமிழர் பேரியக்கம் நிறுவனர் மற்றும் தலைவர் செ. வசந்தகுமார், புரட்சித் கவிஞர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் க.பத்மா மாவட்ட ப.க துணைத் தலைவர் ஜெ. பெரியார் கண்ணன், மாவட்ட ப.க. இணைச்செயலாளர் ஆ.இலக்குமணன், மாநகரப் ப.க தலைவர் ப.மனோகரன், மாநகர ப.க.செயலாளர் சி.நாகநாதன், ஒன்றிய கழகத் தலைவர் சோ. இராமலிங்கம், ஒன்றிய ப.க. செயலாளர் மா இலக்குமணசாமி, விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஏ.வி.என்.குணசேகரன் ஆகியோர் நூலினைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த திராவிடர் கழக,பகுத்தறிவாளர் கழக, பொறுப்பாளர்கள் தி.மு.கழகத் தோழர்கள் நூலினைப் பெற்றுக் கொண்டனர். இறுதியாக பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் குழந்தை. கவுதமன் நன்றியுரையுடன் கூட்டம் இரவு 8.45 மணி அளவில் இனிதே நிறைவுற்றது.
தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 18-7-2026 மலை 6 மணியளவில் ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை புத்தகம் அறிமுக விழா அரங்க கூட்டம் குற்றாலம் வள்ளல் வீகேயென் மாளிகையில் தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்.சிவ.பாரதிராஜா தலைமையில் நடைப்பெற்றது.
தொடக்க உரையாக பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஆலடி எழில்வாணன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் கேடிசி.குருசாமி, பேராசிரியர் நிலகண்டன் முன்னிலையில், கழக காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை, தென்காசி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன், தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பேராசிரியர் நல்லசிவம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூலினை பெற்றுக்கொண்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அவர்களும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கலை கதிரவன் அவர்களும் உறையாற்றினார்கள்.
நூல் அறிமுக உரையாக கழக சொற்பொழிவாளர் பொன் அருண்குமார் உறையாற்றினார். தென்காசி பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் கோ.சாமித்துரை, திமுக ஒன்றிய பொறுப்பாளர் சீனித்துரை, அ.சவுந்திரபாண்டியன், பெரியார் குமார், சங்கரன்கோவில் கருப்பசமி, சிவகிரி வழக்குரைஞர் கங்காதரன் மாணவர் கழக பொறுப்பாளர் சு.இனியன், சீ.செங்கதிர்வள்ளுவன், கணேஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்காசி நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.சேக்கிழார் நன்றிரையாற்றினர்.
திருச்சி

திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா ஜூலை 18ஆம் தேதி மாலை 6 மணியளவில் புத்தூர் சாலை இராமலிங்கநகர் பேருந்து நிறுத்தம் பி.கே. ஓட்டல், கோகுலம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ப.க. தலைவர் ப.லெ.மதிவாணன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட ப.க. செயலாளர் பி.மலர்மன்னன் தலைமை வகித்தார். மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்டச் செயலாளர் சு.மகாமணி, தகவல் தொழில்நுட்ப மாநிலச் செயலாளர் வி.சி.வில்வம், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் ரூபியா ஸ்டாலின், ப.க. மாநக துணை செயலாளர் பி.ஜீவஜோதி, ப.க. மாவட்ட அமைப்பாளர் இரா.மணியன், கழக மாநகரச் செயலாளர் வ.ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தொடக்கவுரை யாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை’ நூல் பேராசிரியர் நம்.சீனிவாசன் நூலினை வெளியிட்டு அறிமுகம் செய்து உரையாற்றுகையில் ஆர்.எஸ்.எஸ்.இன் அபாயம் இந்த நாட்டில் எப்படி ஊடுருவி வருகிறது. அதன் பிற்போக்குத் தன்மையையும் மனித சமுதாயத்தை எப்படி பாழ்படுத்துகிறது என்பதை விளக்கியும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற செய்தியையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்து உரையாற்றினார்.
இவ்விழாவில் மாநகர ப.க தலைவர் குத்புதீன், சேதுராமன், துரைசித்தார்த்தன், அசோகன், பன்னீர்செல்வம், திருவரங்கம் திருநாவுக்கரசு, ச.பாலகங்காதரன், மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் வசந்தி, மாநகர மகளிரணித் தலைவர் ஆர்.பேபி, ஜெயில்பேட்டை குணா, யாழ்மதி, வே. கண்ணையன், காட்டூர் சங்கிலிமுத்து, மாவட்ட கழகத் துணைத் தலைவர் ச.துரைசாமி, பெல் ஆறுமுகம், திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் தமிழ்ச்சுடர், பு.வி.கியூபா, பாரதிதாசன் பேரவை சீனீ.கேசவன் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தினர், திராவிடர் கழகத்தினர் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ஆ.அறிவுச்சுடர் நன்றி கூறினார்.
விடுதலை நகர் சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சென்னை விடுதலை நகர் சுண்ணாம்பு கொளத்தூர் தேவேந்திரன் பார்ட்டி ஹாலில் 19/07/2026 அன்று மாலை 6 மணிக்கு மாவட்ட ப. க தலைவர் த . ஆனந்தன் தலைமையில் முனைவர் ஜெ.குமார் மற்றும் க . நிவேதன் ஆகியோரின் வரவேற்பில் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், முனைவர் சாமிநாதன் தேவதாஸ், மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, புலவர் சங்கரலிங்கம், மாவட்ட செயலாளர் க.தமிழினியன், மாவட்ட துணை தலைவர் ஆர்.கலைச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் வி.கே.ஆர்.பெர்னாட்ஷா, பொதுக்குழு உறுப்பினர் பி.சி.ஜெயராமன், இளைஞரணி தலைவர் நித்தியானந்தன் மற்றும் சரவணகுமார், திவாகர், குணசேகரன், சக்திவேல் மகளிர் அணித் தோழர்கள் தேவி சக்திவேல், சுமதி, ராதா பாண்டு, பூங்கொடி, பிரீத்தா குமார், உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகிக்க தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன் மாவட்டச் செயலாளர் நாத்திகன் பொதுக்குழு உறுப்பினர் மோகன்ராஜ், குணசேகரன், ஆகியோர் கலந்துகொண்டு புத்தகங்களை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர்.
தொடக்க உரையாக மாநில ப.க துணைத் தலைவர் ந.கரிகாலன் ஆர்.எஸ். எஸ், சங்பரிவார் அமைப்புகளின் திறை மறைவு வேலைகளைப் பற்றியும் இன்றைய ஒன்றிய பாசிச பாஜக அரசு கட்டாயம் பாட வேண்டும் என்று சொல்கின்ற வந்தே மாதரம் பாடலைப் பற்றியும் இந்தப் பாடல் மத நல்லிணக்கத்திற்கு எதிரானது என்பதையும் அவருக்கே உரிய பாணியில் உரையாற்றினார் .
அடுத்து நூல் அறிமுக உரை செல்வ. மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர் ப க எழுத்தாளர் மன்றம்) நூலைப்பற்றிக்குறிப்பிடுகையில் 13 நூல்களைப்படித்து அவற்றிலிருந்து குறிப்புகளை எடுத்தாண்டு இந்தப்புத்தகத்தை ஆசிரியர் அவர்கள் ஆக்கி தந்துள்ளார் என்றும்,
நூறாண்டு கால ஆர்எஸ்எஸ் வரலாறை யும், காந்தியாரை ஏன் கொன்றார்கள் என்பதையும் விவேகானந்தரின் பார்ப்பனிய ஆதரவுக்கருத்துகளையும், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முனைந்ததால் வி பி சிங் அவர்களின் ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை பிஜேபி (ஆர் எஸ் எஸ்) விலக்கிக்கொண்டதையும், முதல் அரசியல் சட்டத்திருத்தத்தின் காரணகர்த்தா தந்தை பெரியாரின் போராட்டம் பற்றியும் நல்ல வண்ணம் விளக்கி விரிவாக உரையாற்றினார்.
நிறைவாக வழக்குரைஞர் வே.பா. அறிவன் நன்றி நவில நிகழ்ச்சி நிறைவுற்றது.
திமுகவைச் சேர்ந்த அன்பரசன், ஆனந்தன், நாராயணமூர்த்தி, மடிப்பாக்கத் தார் ராஜா விடுதலை நகர், வீரமணி, எஸ்.டி.கொரியர் கணேஷ், கண்ணன், உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் 80 புத்தகத்திற்கு மேல் ஆர்வத் துடன் வாங்கி மகிழ்ந்தனர்.
.png)
4 hours ago
3







English (US) ·