சென்னை, மே 9- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், ஒரு முக்கிய திருப்பமாக தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், விஜய்யின் தவெக வசம் தற்போது 107 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு இன்னும் 11 இடங்கள் தேவைப்பட்ட சூழலில், ஏற்கெனவே 5 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவிற்கு ஆதரவு அளித்தது. இதனைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கோரப்பட்டது.
அவசர ஆலோசனைக் கூட்டங்கள்
தவெகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து இடதுசாரி கட்சிகள் நேற்று (8.5.2026) சென்னையில் தீவிர ஆலோசனை நடத்தின:
இந்திய கம்யூனிஸ்ட்: சூளைமேடு அமீர் ஜான் தெருவில் கட்சியின் அவசர செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
தியாகராயர் நகரில் உள்ள மாநில அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
நிபந்தனையற்ற ஆதரவு – அமைச்சரவையில் பங்கேற்பில்லை
கூட்டத்திற்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
ஆளுநரின் முடிவுக்கு எதிர்ப்பு:
தனிப்பெரும் கட்சி என்ற முறையிலேயே தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். 118 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு இருந்தால் தான் அழைப்பேன் என்று ஆளுநர் கூறுவது சட்டவிரோதமானது.
ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப் பட்டால், அது பாஜக கொல்லைப் புற வழியாக ஆட்சி நடத்துவதற்கு சமமாகும். அந்த நோக்கத்தை முறியடிக்கவே தவெகவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.
வெளியிலிருந்து
ஆதரவு:
தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்தாலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற் காது. வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு அளிப்போம் எனத் தெரி வித்துள்ளனர். திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டும். அப் போதுதான் தமிழ்நாடு முன்னோக்கி செல்லும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
.png)
1 hour ago
10





English (US) ·