சென்னை, மே. 9- அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா பிளஸ்-2 பொதுத் தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், துணை பொதுத் தேர்வு குறித்த தகவலை தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
பிளஸ்-2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 13ஆம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். விடைத்தாள் நகல் பெற 15, 16-ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு வராதவர்கள், தோல்வி அடைந்தவர்கள் அடுத்ததாக துணை பொதுத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறும் வகையில், அதற்கான தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 29ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவை வருகிற 18ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.
மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை இணைய வழி மூலம் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
.png)
1 hour ago
10





English (US) ·