Last Updated:October 14, 2025 6:41 AM IST
தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், சென்னை நீலாங்கரையில் அக்கட்சித் தலைவர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், சென்னை நீலாங்கரையில் அக்கட்சித் தலைவர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பாக
தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், நிர்மல் குமார், கரூர் வடக்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில், நிர்மல் குமார், ஆனந்த் தலைமறைவானதாக கூறப்பட்டது. தொடர்ந்து முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிர்மல் குமார், ஆன்ந்த் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றும் எஸ்ஐடி விசாரணையை நிறுத்தி வைத்தது. இதனால், ஆனந்த், வெளியே வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டில் அவரை சந்தித்து ஏறத்தாழ 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து காரில் புறப்பட்ட ஆனந்த் புதுச்சேரி நோக்கி சென்றார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
First Published :
October 14, 2025 6:41 AM IST