நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்து பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
14

Image Credit : X
Thalaivar Thambi Thalaimaiyil OTT Release
20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக பயணித்து வருகிறார் ஜீவா. அவர் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன திரைப்படம் தலைவர் தம்பி தலைமையில். இப்படம் முதலில் ஜனவரி 30ந் தேதி வெளியிட தான் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பொங்கல் ரேஸில் இருந்து விஜய்யின் ஜனநாயகன் படம் ஜகா வாங்கியதால், அதிரடியாக பொங்கல் ரேஸில் களமிறங்கியது ஜீவா படம். இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளிவந்த படங்களில் அதிக லாபம் ஈட்டியது தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் தான்.
24
Image Credit : X
ஹிட் அடித்த தலைவர் தம்பி தலைமையில்
இப்படத்தை நிதிஷ் சகாதேவ் இயக்கி இருந்தார். இவர் மலையாளத்தில் ஃபெலிமி என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர் ஆவார். தமிழில் அவர் இயக்கிய முதல் படம் இதுவாகும். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பிரார்த்தனா நடித்திருந்தார். மேலும் தம்பி ராமையா, இளவரசு, குக் வித் கோமாளி சர்ஜின், ஜென்சம் பிரபாகர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தை தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரித்து இருந்தார். இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் நகைச்சுவை நிரம்பி இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
34
Image Credit : X
தலைவர் தம்பி தலைமையில் வசூல்
நடிகர் ஜீவாவிற்கு இது ஒரு கம்பேக் படமாக அமைந்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்காமல் துவண்டு போய் இருந்த நடிகர் ஜீவாவின் கெரியரை, தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் தூக்கி நிறுத்தி உள்ளது. இப்படம் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அதனை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.35 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இருந்தது. இப்படம் வெறும் ரூ.6 கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
44
Image Credit : X
தலைவர் தம்பி தலைமையில் ஓடிடி ரிலீஸ்
இந்நிலையில், தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உள்ளதாகவும், வருகிற பிப்ரவரி 12ந் தேதி முதல் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தியேட்டரில் ரிலீஸ் ஆன போது அமோக வரவேற்பை பெற்ற தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் பிற மொழி ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
.png)
20 hours ago
15






English (US) ·