தவெகவுக்கு சிக்கல்... திருப்பத்தூர் எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஐகோர்ட் தடை

19 hours ago 4

Last Updated:May 12, 2026 11:18 AM IST

திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதித்து வழக்கு விசாரணை மே 26க்கு ஒத்திவைக்கப்பட்டது.

கே.ஆர். பெரியகருப்பன் தான் போட்டியிட்ட திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் சீனிவாச சேதுபதியிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
கே.ஆர். பெரியகருப்பன் தான் போட்டியிட்ட திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் சீனிவாச சேதுபதியிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க கோரி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணை மே 26 தள்ளிவைத்தது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கக் கோரி, திமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சிவகங்கை - திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கை, திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால், அந்த வாக்கை மீட்டு, சரிபார்க்க வேண்டும் என, மனுவில் கோரப்பட்டிருந்தது. நேற்று, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டது குறித்து திமுக வேட்பாளர் அனுப்பிய புகார் மனுவுக்கு பதிலளிக்காதது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், இந்த பிரச்னை தொடர்பாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும். நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வெளியிடப்பட்ட பின் தேர்தல் ஆணையத்தின் பணிகள் முடிவடைந்து விட்டது. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறுவது கற்பனையானது. தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளதாகக் கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனத் தெரிவித்தார்.

பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியுள்ளதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு. வாக்கு மாறி வந்தது குறித்து தேர்தல் அதிகாரியே தகவல் தெரிவித்திருக்கிறார். தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தால் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு, வழக்கு விசாரணையை மே 26 தேதி தள்ளி வைத்தனர்.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ.வுக்கு தடை விதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

First Published :

May 12, 2026 11:18 AM IST

Read Entire Article