பியூ தாய் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யோட்சனான் வோங்சாவட் வாக்களித்த பிறகு செல்கிறார். - படம்: ஏஎஃப்பி
பேங்காக்: தாய்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
பொருளாதாரம் மற்றும் கம்போடியாவுடனான எல்லை மோதல் ஆகிய இரண்டு முக்கிய பிரச்சினைகளை மனத்தில் வைத்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் சுமார் 60 அரசியல் கட்சிகள் கலந்துகொள்கின்றன. அவை, கீழவையின் 500 நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டியிடுகின்றன.
தாய்லாந்தின் 76 மாகாணங்கள் மற்றும் அதன் தலைநகர் பேங்காக்கில் கிட்டத்தட்ட 53 மில்லியன் மக்கள் உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் 2.3 மில்லியன் இளையர்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் 20 வயது மாணவி அச்சினடா லிம்லியர்ட்ஃபோலாபூன், எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்று தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.
ஆனால் அடுத்த அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
“விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உணர்கிறேன். தாய்லாந்து மக்களின் சம்பளம் எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக இல்லை,” என்று அவர் கூறினார்.
முதல் முறையாக வாக்களித்த மற்றொரு இளையரான 21 வயது ரன்லாரிஸ் பஞ்சவன், கட்சிகளின் கொள்கைகளையும் வேட்பாளர்களின் அனுபவத்தையும் கருத்தில் கொள்வதாகக் கூறினார்.
இந்தப் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் மகத்தான வெற்றியைப் பெறுவதற்கான சாத்தியமில்லை என்று அரசியல் கணிப்பாளர்கள் கூறுகின்றனர். மீண்டும் ஒரு கூட்டணி அரசாங்கம் உருவாகும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
.png)






English (US) ·