பெண் விவகாரத்தில் சிக்கி இவரது மனைவி ரம்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்கெனவே 2020-ல் வாணியம்பாடி நகரச் செயலாளர் பதவியை இழந்தவர் இந்த சாரதி குமார்.
14

Image Credit : x
ஆர்எஸ்எஸ் கொடியை கையில் ஏந்திய சாரதி குமார்
வாணியம்பாடி தொகுதியில் திமுக வெல்லவில்லை என்றால், பதவி காலி என முதல்வர் மு.க.ஸ்டாலின் வார்னிங் கொடுத்து அனுப்பினார். இந்நிலையில், தனது தொழில் பார்ட்னாரான அதிமுக., எம்எல்ஏ., செந்தில்குமாருடன் வீதியில் இறங்கி கம்பு சுத்தியுள்ளார் திமுக நகர செயலாளர் சாரதி குமார். இந்த சம்பவத்தால் ஸ்டாலினுக்கு சவால் விட்டதாகவே பார்க்கிறார்கள் வாணியம்பாடி திமுக கூட்டணி கட்சியினர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கிழக்கு திமுக நகர செயலாளர் சாரதிகுமார் மீது நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து, மணல் கடத்தல் போன்ற ஏராளமான புகார்கள் அறிவாலயத்தில் குவிந்த வண்ணம் உள்ளன. அதேவேளை, கடந்த 2022-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆர்எஸ்எஸ் கொடியை கையில் ஏந்தி பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் புடைசூழ, ஊர்வலம் சென்று சர்ச்சை ஏற்படுத்தியது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜாதி பாசத்தில் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முத்திடம் டீல் பேசி ஆதரவாக செயல்பட்டது, திமுக மாவட்ட செயலாளரோடு மோதல் போக்கு போன்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு.
24
Image Credit : Asianet News
மு.க.ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை
சமீபத்தில் நடந்த ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பில் இதனை சுட்டிக்காட்டி, ‘ஓழுங்கா தேர்தல் வேலைகளை பார்க்கனும். நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற வைக்கனும். இல்லை என்றால் புகார் ஃபைலை காட்டி இதன் மீது நடவடிக்கை உறுதி’ என முதல்வர் ஸ்டாலின் லெஃப்ட் ரைட் வாங்கி அனுப்பியதாக தகவல் வெளியானது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் முதல்வர் எச்சரிக்கையைத் துடைத்தெறிந்த சாரதி குமார் கடந்த ஜனவரி 8- ம்தேதி நடந்த வாணியம்பாடி வணிகர் சங்கம் நடத்திய பொங்கல் விழாவில், அதிமுக சிட்டிங் எம்எல்ஏ., செந்தில்குமாருடன் "அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ.. ஒத்திக்கோ.." என்ற சினிமா பாடலுக்கு இருவரும் வீதியில் இறங்கி கம்பு சுத்திய சம்பவம் திமுகவினர் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக கோவை மாவட்ட நிர்வாகிகளுடனான ஒன் டூ ஒன் சந்திப்பில் சுல்தான் பேட்டை மேற்கு ஒன்றியச் செயலாளர் பிவி. மகாலிங்கத்தின் பதவி பறிக்கப்பட்டது. அதற்கு காரணம் அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பது தலைமைக்கு தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக பதவியை பறித்தார் ஸ்டாலின். அத்தோடு சுல்தான் பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக ரமேஷ் என்பவரை நியமித்தார்.
34
Image Credit : Asianet News
நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது?
அந்த வகையில், வாணியம்பாடி கிழக்கு நகர செயலாளர் சாரதி குமார், அதிமுக எம்எல்ஏ., செந்தில் குமாருடன் வீதியில் இறங்கி, கம்பு சுற்றி அரங்கேற்றிய சம்பவம், ‘நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது? என்பதாக முதல்வர் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கைக்கு சாரதி குமார் விடுத்த பதிலடியாகவே பார்க்கிறோம்’’ என்கிறனர் உடன்பிறப்புகள்.
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நகரச் செயலாளர் சாரதி குமாரை தொடர்பு கொண்டு இந்த விவகாரங்கள் குறித்து கேட்டோம். அனைத்தையும் கேட்டுக் கொண்டவர், ‘‘10 நிமிடங்களில் மீண்டும் அழைக்கிறேன்’’ எனத் துண்டித்தார். மீண்டும் அழைப்பை ஏற்கவில்லை.
44
Image Credit : x
துரைமுருகன் வக்காலத்து..?
‘‘ஏற்கெனவே பெண் விவகாரத்தில் சிக்கி இவரது மனைவி ரம்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் 2020-ல் வாணியம்பாடி நகரச் செயலாளர் பதவியை இழந்தவர் இந்த சாரதி குமார். பாஜக- அதிமுக பிரமுகர்களோடு வெளிப்படையாக தொடர்பில் இருந்தால் எப்படி சட்டமன்ற தேர்தலில் திமுகவோ அதன் கூட்டணி வேட்பாளரோ வெற்றி பெற முடியும்? எப்படியும் தனக்கு சீட் கிடைக்காது. அதனால் வெளிப்படையாகவே எதிரணி தரப்பில் கொஞ்சி குலாவி வருகிறார், இவரை சார்ந்த சமூகத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் எதிரணிக்கு வாக்களியுங்கள் என்பதாகவே இதன் மூலம் உணர்த்தி வருகிறாரா? என கேள்வி எழுப்பியவர்கள், சாராதி மீது நடவடிக்கை பாயுமா? அல்லது பொதுச்செயலாளர் துரைமுருகன் வக்காலத்தில் தொடர்ந்து தப்பிப்பாரா?’’ என்கிற கேள்வியை வாணியம்பாடி திமுகவினர் பொதுவெளியில் வைத்திருக்கிறார்கள்.
.png)
19 hours ago
17






English (US) ·