தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் 1299 காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பணியிடங்களுக்கான திறனாய்வு எழுத்து தேர்வு இன்று 21.12.2025-ந்தேதி திருச்சி மாநகரில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேசியக் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி (பெண்கள் மட்டும்) ஆகிய 3 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
இத்தேர்விற்கு திருச்சி மாநகரில் 2759 ஆண்கள் மற்றும் 830 பெண்கள் என மொத்தம் 3589 போட்டியாளர்களில் 2599 நபர்கள் (2014 ஆண்கள்/585 பெண்கள்) இந்த எழுத்து தேர்வில் கலந்து கொண்டார்கள்.
இத்தேர்வு நடைபெற்ற 3 தேர்வு மையங்களில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என சுமார் 430 பேர் பணியமர்த்தப்பட்டு, தேர்வுவானது நடைபெற்றது. மேற்கண்ட தேர்வின் சிறப்பு மேற்பார்வை அதிகாரியான (Super Check Officer)/மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அவர்கள் தேர்வு நடைபெற்ற 3 மையங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.
தேர்வு மையங்களில் தேர்வு எழுத வருபவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான உகந்த சூழ்நிலை உறுதி செய்யப்பட்டுள்ளதா எனவும், தேர்வு எழுத வருபவர்களுக்கு குடிநீர், சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும், தேர்வு எழுத வருபவர்கள் உரிய சோதனைக்கு பின் தேர்வு மையங்களுக்குள் TNUSRB வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை நேரில் சென்று பார்வையிட்டு, பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்கள்.
மேலும் மாநகர காவல் ஆணையர் அவர்கள் ஆய்வின்போது துணைக்குழுதலைவர் மற்றும் தேர்வு குழு உறுப்பினர்கள் உடனிருந்தார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
.png)






English (US) ·