திருவெறும்பூரில் புறநகர் மின்சார ரயில் நிற்குமா? மத்திய அமைச்சர் முக்கிய பதில்

14 hours ago 10

Last Updated:Jul 22, 2026 5:51 PM IST

ரயில்வே துறையில் ரயில்கள் குறிப்பிட்ட நிலையத்தில் நின்று செல்வது மக்களின் போக்குவரத்து தேவைகள், செயல்பாட்டுச் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒரு நடைமுறை என்றும் அமைச்சர் தெரிவித்தார்

திருவெறும்பூரில் புறநகர் மின்சார ரயில் நிற்குமா? மத்திய அமைச்சர் முக்கிய பதில்
திருவெறும்பூரில் புறநகர் மின்சார ரயில் நிற்குமா? மத்திய அமைச்சர் முக்கிய பதில்

திருச்சிராப்பள்ளி–மயிலாடுதுறை புறநகர் மின்சார ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், பயணிகள் தேவை, செயல்பாட்டுத் சாத்தியக்கூறுகள், வருவாய் வாய்ப்புகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் உறுப்பினர்  துரை வைகோ எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், பொதுமக்கள் வசதிக்காக சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி சோழன் விரைவு ரயில் (22675/22676) இவ்வாண்டு ஜனவரி 26 முதல் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற பல்வேறு கோரிக்கைகள் அவை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், ரயில் பயணிகளிடமிருந்து ரயில்வே வாரியம், மண்டல ரயில்வே, கோட்ட அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாகப் பெறப்படுவதாகத் தெரிவித்தார்.

தற்போது திருவெறும்பூர் ரயில் நிலையத்தின் வழியாகக் கடலூர் துறைமுகம் - மைசூரு விரைவு ரயில், தாம்பரம் - திருச்சிராப்பள்ளி விரைவு ரயில், மயிலாடுதுறை - சேலம் விரைவு ரயில், மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில், சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி சோழன் விரைவு ரயில், திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை பயணிகள் ரயில், தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில், திருவாரூர் - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில், திருச்சிராப்பள்ளி - காரைக்கால் பயணிகள் ரயில், மன்னார்குடி - திருச்சிராப்பள்ளி ரயில், காரைக்கால் - திருச்சிராப்பள்ளி ரயில் உட்பட மொத்தம் 25 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருவதாகக் கூறினார். ரயில்வே துறையில் ரயில்கள் குறிப்பிட்ட நிலையத்தில் நின்று செல்வது மக்களின் போக்குவரத்து தேவைகள், செயல்பாட்டுச் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒரு நடைமுறை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Read Entire Article