தீவிரவாதிகளுக்கு ஆதரவான பதிவுகள்... கைதான 6 பேர்... திருப்பூரில் பதுங்கியவர்களின் பின்னணி என்ன...?

2 hours ago 18

Last Updated:Feb 21, 2026 7:39 PM IST

திருப்பூரில் பதுங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டினர், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

News18
News18

திருப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த பங்களாதேஷ் நாட்டினர் திருப்பூரில் சிக்கியது எப்படி?

திருப்பூரில் இருந்துகொண்டு பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்கள் பதிவிடுவதை, மத்திய உளவுப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்ததால், டெல்லி கியூ பிரான்ச் போலீசார் திருப்பூர் வந்து விசாரணை மேற்கொண்டனர். திருப்பூர் மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையினர் உதவியுடன் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

போலீசாரின் விசாரணையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 2 பேர், பல்லடத்தில் 3 பேர், திருமுருகன்பூண்டி பகுதியில் ஒருவர் என 6 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் இவர்கள் 6 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மிஜானூர் ரஹ்மான், மொகமது ஷாபாட், உமர், மொகமது லிடான், மொகமது ஷாகித், மொகமது உஜ்ஜல் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் 6 பேரும் திருப்பூரில் பதுங்கி, பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

திருப்பூரில் பதுங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டினர், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

தீவிரவாதிகளுக்கு ஆதரவான பதிவுகள்... கைதான 6 பேர்... திருப்பூரில் பதுங்கியவர்களின் பின்னணி என்ன...?

Read Entire Article