சொந்த வீடு இல்லாத இளையர்களின் எண்ணிக்கை 2015லிருந்து அதிகரித்து வந்துள்ளது. - படம்: அன்ஸ்பிளாஷ்
சோல்: தென் கொரியாவில் சாதனை அளவாக இருபதுகளிலிருந்து முப்பதுகள் வரையிலான வயதில் உள்ள 3.61 இளம் குடும்பத் தலைவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை.
இவர்களில் ஏறக்குறைய ஒரு மில்லியன் குடும்பத் தலைவர்கள் தலைநகர் சோலில் சொந்த வீடு இல்லாமல் இருக்கின்றனர்.
2015 ஆம் ஆண்டு அரசாங்கம் தனது அதிகாரபூர்வ கணக்கெடுப்பைத் தொடங்கியதிலிருந்து 40 வயதுக்குட்பட்ட சொந்த வீடுகள் இல்லாத குடும்பத் தலைவர்களின் எண்ணிக்கை மிக உயர்ந்த எண்ணிக்கையை எட்டியதாக தரவு மற்றும் புள்ளிவிவர அமைச்சு பிப்ரவரி 8 அன்று தெரிவித்துள்ளது.
சோலில் இந்த எண்ணிக்கை 992,856 ஆக அதிகரித்துள்ளது. இது, இதுவரை பதிவான மிக அதிக எண்ணிக்கையாகும்.
2015 ஆம் ஆண்டில் 799,491 என்ற ஆரம்ப எண்ணிக்கையிலிருந்து சொந்த வீடுகள் இல்லாத இளம் சோல் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் கியோங்கி, இஞ்சியோன் உள்ளிட்ட பெரிய சோல் பகுதியிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும், தலைநகர் பகுதியிலும் இளம் வீட்டு உரிமையாளர்களின் விகிதம் முறையே 26.3 விழுக்காடு, 24.6 விழுக்காடாக உள்ளது. ஆனால் சோலில் வெறும் 17.9 விழுக்காடாக அது இருக்கிறது.
புள்ளிவிவர அமைச்சின் நவம்பர் அறிக்கையின்படி சோலில் வசிக்கும் 30 வயதுடையவர்களில் 24.8 விழுக்காட்டினர் மட்டுமே 2024ல் வீடுகளை வைத்திருந்தனர். இது 2015ல் 33.3 விழுக்காட்டிலிருந்து கணிசமாகக் குறைந்துள்ளது.
தென்கொரியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சோலில் வீட்டுவசதி பிரச்சினைகள், விலைவாசி உயர்வு காரணமாக மோசமடைந்து வருகின்றன.
2025ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் நாற்பது வயதுக்கு உட்பட்ட இளம் குடும்பத் தலைவர்கள் மாத வாடகையாக 214,000 வான் (S$186) செலவிடுவதாக புள்ளிவிவர அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது. இது, 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய உச்சமாகும்.
.png)






English (US) ·