நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு: அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!

17 hours ago 14

Last Updated:Dec 21, 2025 2:41 PM IST

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல மலையாள நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஸ்ரீனிவாசனின் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீனிவாசன்
ஸ்ரீனிவாசன்

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல மலையாள நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஸ்ரீனிவாசனின் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

மலையாள திரையுலகில் நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என பல முகங்கள் கொண்டவர் ஸ்ரீனிவாசன். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் குரல் பதிவு வெளியிட்டு இரங்கல் தெரிவித்த நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து ஸ்ரீனிவாசனின் சொந்த ஊரான எர்ணாகுளம் மாவட்டத்தின் உதயம்பேரூரில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். லேசா லேசா படத்தில் இவரின் காமெடி காட்சிகளை யாராலும் மறக்க முடியாது. இயல்பான நடிப்பு மற்றும் முகபாவனைகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். மலையாள சினிமாவில் பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஆடியோவில், ”ஸ்ரீனிவாசன் மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் சிறந்த நடிகர். நானும் அவரும் ஃபிலிம் இன்ஸ்ட்யூட்டில் ஒன்றாக பழகினோம்” என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article