நடுக்கடலில் பழுதாகி நின்ற
நாகை – இலங்கை பயணிகள் கப்பல்
7 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் 141 பயணிகள் மீட்பு!
நாகப்பட்டினம், மே 9- நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்குப் புறப்பட்ட பயணிகள் கப்பல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுக்கடலில் பழுதாகி நின்றது. இதனால் சுமார் 7 மணி நேரம் உணவு மற்றும் குடிநீரின்றி தவித்த 141 பயணிகள் மீனவர்களின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நாகை – இலங்கை பயணிகள் கப்பல்
நாகை துறைமுகத்திலிருந்து 141 பயணிகளுடன் இலங்கை நோக்கிச் சென்ற பயணிகள் கப்பல், நடுக்கடலில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு நின்றது. பல மணி நேரமாகியும் கப்பலை இயக்க முடியாத சூழலில், நடுக்கடலில் கப்பல் தத்தளித்தது.
கப்பல் பழுதாகி நின்றதால், அதிலிருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். நீண்ட நேரம் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காததால் பயணிகள் சோர்ந்து போயினர்.கடல் சீற்றம் மற்றும் உணவு இல்லாத காரணத்தால் பல பயணிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் அப்பகுதி மீனவர்கள் விரைந்து செயல்பட்டனர். தங்களது மீட்புப் படகுகள் மூலம் பழுதாகி நின்ற பயணிகள் கப்பலை கயிறு கட்டி இழுத்து வந்தனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, கப்பல் பாதுகாப்பாக நாகை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
துறைமுகத்தை வந்தடைந்த 141 பயணிகளுக்கும் அங்கேயே தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் மூலம் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தற்போது பயணிகள் அனைவரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.png)
1 hour ago
10





English (US) ·