எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியின் மருத்துவ செலவு ஏற்பதாக ஆதி குணசேகரன் சொல்லி இருப்பதால் அவர் மீது ஜனனிக்கு சந்தேகம் வந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
2 Min read
Published : Mar 02 2026, 11:00 AM IST
15

Image Credit : youtube/suntv
Ethirneechal Thodargiradhu serial today episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வில்லாதி வில்லனாக இருந்து வந்த ஆதி குணசேகரன் தற்போது தன்னை நல்லவர் போல் காட்டிக்கொள்ள பல்வேறு வேலைகளை பார்த்து வருகிறார். ஆதி குணசேகரனின் தம்பிகளான கதிர் மற்றும் ஞானம் இருவரும் தங்கள் மனைவிகளிடம் இணக்கமாக நடந்து கொண்டு அவர்களிடம் சரளமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது தெரியாமல் ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர் கன்பியூஸ் ஆகி இருக்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
Image Credit : youtube/suntv
குணமாகும் ஈஸ்வரி
ஈஸ்வரி குணமாகி வருவதாக ஆஸ்பத்திரியில் இருந்து போன் போட்டு கூறியிருந்த நிலையில் அவரைப் பார்க்க நந்தினி ரேணுகா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தனர். அங்கு சென்று டாக்டரிடம் ஈஸ்வரியின் உடல்நிலை பற்றி விசாரிக்கையில், அவர் இன்னும் ஒரு வாரத்தில் குணமாகி விடுவார் எனக் கூறியுள்ளார். அவர் குணமடைந்தாலும் அவருக்கு உடம்பில் சில பிரச்சனைகள் இருக்கக்கூடும் எனவும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது அவரது சிகிச்சைக்காக ஒரு மிகப்பெரிய தொகையை கட்டுமாறு டாக்டர் கூறியிருக்கிறார். அவர்களும் இன்னும் சில தினங்களில் கட்டுகிறோம் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
35
Image Credit : youtube/suntv
ஆதி குணசேகரனுக்கு தெரியவரும் உண்மை
ஈஸ்வரி குணமாகும் விஷயம் ஆதி குணசேகரனுக்கும் அவருடைய தம்பிகளுக்கும் தெரிய வேண்டாம் என வீட்டில் உள்ள பெண்கள் நினைத்திருந்தனர். ஆனால் தற்போது மிகப் பெரிய தொகை கட்ட வேண்டி இருப்பதால் அதை ஆதி குணசேகரனிடம் தான் கேட்க வேண்டும் என்பதால் வேறு வழி இன்றி வீட்டுக்கு வந்ததும் உண்மையை சொல்லி விடுகிறார்கள். அதுமட்டுமின்றி ஜனனி வயிற்றில் வளரும் குழந்தையால் ஆதி குணசேகரன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜோசியர் சொன்னதை ஒட்டுக்கேட்ட கரிகாலன் அந்த விஷயத்தை ஆதி குணசேகரனிடமே சொல்லிவிடுகிறார்.
45
Image Credit : youtube/suntv
ஈஸ்வரிக்கு பணம் கட்ட முடிவெடுத்த ஆதி குணசேகரன்
இந்த விஷயத்தை கேட்டு ஆதி குணசேகரன் அதிர்ச்சி அடைவார் என கரிகாலன் எதிர்பார்த்து இருக்க அவரோ பொறுமையின் சிகரமாக அமர்ந்திருக்கிறார். பின்னர் வீட்டில் உள்ள பெண்களை அழைத்து, நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும், ஆஸ்பத்திரியில் இருக்கும் என் பொண்டாட்டி ஈஸ்வரியும் நல்லா இருக்கணும் என சொன்னதோடு ஆஸ்பத்திரியில் எவ்வளவு பணம் கட்ட சொன்னார்கள் என கேட்கிறார். எவ்வளவு என்பது தெரியாது என சொல்லும் கதிரிடம், உடனே டாக்டருக்கு போன் போட்டு எவ்வளவு கட்ட வேண்டும் என கேட்டு சொல் என கூறுகிறார். இதையடுத்து கதிர் மருத்துவமனைக்கு போன் போட்டு ஈஸ்வரிக்கு கட்ட வேண்டிய பில் தொகை எவ்வளவு என்பதை விசாரிக்கிறார்.
55
Image Credit : youtube/suntv
சந்தேகப்படும் ஜனனி
ஆதி குணசேகரன் பேசியது எல்லாம் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஜனனி, இவர் பேசுவதெல்லாம் நம்பும்படி இல்லை. எதற்காக இவர் இப்படி நல்லவர் வேஷம் போடுகிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுக்கிறார். ஆதி குணசேகரன் திடீரென நல்ல ஒரு போல் மாறி இருப்பதால் வீட்டில் உள்ள அனைவருமே அதிர்ச்சி இல் தான் இருக்கிறார்கள். அவரின் இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணியில் கண்டிப்பாக ஏதேனும் சதி இருக்க வாய்ப்பு இருக்கிறது. அது என்ன என்பதை ஜனனி கண்டுபிடிப்பாரா? ஈஸ்வரி கண் விழித்து வீட்டுக்கு திரும்புவாரா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.
.png)
1 hour ago
17







English (US) ·