Last Updated:Dec 20, 2025 11:08 PM IST
கூடலூரில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கட்டுப்பாட்டு மையம்

நாட்டிலேயே முதன்முறையாக மனித விலங்கு மோதலை தடுக்க நீலகிரி மாவட்டம் கூடலூரில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. கூடலூர் அருகே நாடுகானி வனச்சரகத்திற்கு உட்பட்ட மரபியல் தோட்டத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை நீலகிரி எம்பி ஆ.ராசா மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். மனித விலங்கு மோதலில் அதிகம் பாதிக்கப்படும் 46 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு ஏஐ தொழிநுட்பத்துடன் கூடிய அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விலங்குகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணித்து ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் வனத்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கும் வகையிலும், கண்காணிப்பு மையத்தில் அலாரம் ஒலிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.மேலும், வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ள வனத்துறையினருக்கும், மக்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First Published :
Dec 20, 2025 11:08 PM IST
மனித விலங்கு மோதல்: கூடலூரில் நாட்டிலேயே முதன்முறையாக AI தொழில்நுட்பத்துடன் கட்டுப்பாட்டு மையம்
.png)






English (US) ·