நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு: 3 மணிநேர ஆலோசனையில் பேசியது என்ன?

19 hours ago 10

Last Updated:Dec 21, 2025 7:36 AM IST

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகளுடன் நேற்று மாலை கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், மாநில நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதையடுத்து, பட்டியலை சரிபார்க்கும் பணியில் திமுக, அதிமுக ஆகிய கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். நீக்கப்பட்ட தகுதியான நபர்களை மீண்டும் சேர்ப்பது தொடர்பான பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

தகுதியான நபர்கள் நீக்கப்பட்டிருந்தால் அதிமுக உதவ வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகளுடன் நேற்று மாலை கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

TVK Vijay | தவெக தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் சந்திப்பு... 3 மணிநேர ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது என்ன?

Read Entire Article