நிறுவனங்கள், அவற்றின் பங்குதாரர்களுடன் தகவல்தொடர்பை மேம்படுத்த உதவும் நோக்கத்துடன் புதிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
சிங்கப்பூரில் உள்ள வணிக, நிதித் துறைத் தலைவர்களுடன் சேர்ந்து நாட்டின் தேசியக் கணக்கியல் அமைப்பு பணிக்குழுவொன்றை நிறுவியுள்ளது.
நிறுவனங்கள் அவற்றின் நிதிநிலை அறிக்கைகளை எவ்வாறு மெருகூட்டலாம் என்பது குறித்து ஆராய்வதற்காகப் பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள், பங்குதாரர்களுடன் தகவல்தொடர்பை மேம்படுத்த உதவுவது நோக்கம்.
சிங்கப்பூர் நிபுணத்துவக் கணக்காளர் கழகம், புதிய பணிக்குழுவைத் திங்கட்கிழமை (மே 11) நிறுவியது. சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையுடன் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த கருத்தரங்கொன்றில் அதுகுறித்த விவரம் வெளியிடப்பட்டது.
“நிறுவனங்கள், செயல்பாடுகளை மட்டும் தெரிவிப்பதோடு நின்றுவிடாமல் சவால்களை எதிர்கொள்ளும் உத்திகளையும் நீண்டகால இலக்குகளையும் மிகத் தெளிவான முறையில் தெரிவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” எனக் கழகத்தின் தலைவர் சிண்டி பெய் தெரிவித்தார்.
அறிக்கையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்குரிய எடுத்துக்காட்டுகளைப் பணிக்குழுவின் தலைவர் யூலீன் கோ குறிப்பிட்டார்.
“தெளிவான, நம்பகமான நிதி அறிக்கைகளை வெளியிடுவது; நிலையான முக்கிய முடிவுகள், அனுமானங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகவல்களைக் கொண்டதாக அவை இருப்பது; நிறுவனத்தின் இலக்குகளுடன் செயல்பாட்டை ஒப்பிடும் விளக்கத்தைத் தருவது; நிறுவனத்தின் ஆற்றல்களையும் உத்திகளையும் வெளிப்படுத்துவது முதலியவையே அவை,” என்றார் அவர்.
“அவ்வாறு செய்வதன் மூலம், நிறுவனத்தின் உண்மையான மதிப்பை முதலீட்டாளர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்,” என்று அவர் சொன்னார்.
.png)







English (US) ·