தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தேர்தல்… போட்டியின்றி தேர்வான தவெக எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர்

1 hour ago 8

Last Updated:May 11, 2026 7:19 PM IST

சட்டமன்ற சபாநாயகராக தவெக எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு.

News18
News18

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக தவெக இருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை அதற்கு கிடைக்காமல் இருந்தது. இதனையடுத்து, ஆட்சி அமைக்க திமுக கூட்டணி கட்சிகளின் தயவை நாடியது தவெக.

அதன்படி, தவெகவின் அழைப்பை ஏற்று திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணிக்கு சென்றது காங்கிரஸ். அதேசமயம், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின. இதன் மூலம் பெரும்பான்மையை பெற்ற தவெக, நேற்று (10ஆம் தேதி) தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவியது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்றார். மேலும் நேற்று மாலை தற்காலிக சபாநாயகராக கருப்பையா தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைமையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடி, புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்.

பின்னர், சபாநாயகராக ஆயிரம் விளக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ.வான ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக துறையூர் தவெக எம்.எல்.ஏ. ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், சபாநாயகர் தேர்தலில் வேறு யாரும் போட்டி வேட்புமனுவை தாக்கல் செய்யாததால், ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், ரவி துணை சபாநாயகராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Read Entire Article