புதுடில்லி, மே 12 – நூறுநாள் வேலைத் திட்ட த்தை ஒழித்துக் கட்டும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘விபி – ஜி ராம் ஜி’ சட்டம், ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்ப டுத்தப்பட உள்ளதாக ஒன்றிய பாஜக அரசு அறி வித்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
பெருநிறுவனங்கள் தொழி லாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு உருவாக்கப்பட்ட வைதான் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள். இதைச் சட்ட மாக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை மக்களவையிலேயே கடுமையாக எதிர்த்திருந்தோம்.
எனினும், நாடாளு மன்ற ஜனநாயகத்தைத் துளியும் மதிக்காத மோடி அரசு இச் சட்டங்களை ஒரு தலைபட்சமாக இயற் றியது. தற்போது இச்சட்டங்களுக்கான விதிகளை அறிவிக்கை செய்து அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது, ஒன்றிய பாஜக அரசு.
தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நியாயமான சலு கைகளுக்கு எதிரான பா.ஜ.க. அரசின் தாக்குதலுக்கு வன்மை யான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
கிராமப்புற ஏழை மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை அழிக்க உரு வாக்கப்பட்டதுதான் விபி ஜி ராம் ஜி (VB G RAM G) சட்டம். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இருந்த கடைசி பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பாது காப்பையும் அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எளிய மக்களின் உரிமையைப் பறித்து அவர்களின் உழைப்பைச் சுரண்டி கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும் இச்சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு சு. வெங்கடேசன்
எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
.png)
1 hour ago
14








English (US) ·