அப்சல் எழுதிய ஹூருல் அய்ன் : சிறுகதைகள். - தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்
தலைப்பு: ஹூருல் அய்ன் : சிறுகதைகள்
நூலாசிரியர்: அப்சல்
பதிப்பாளர்: ஏறாவூர் : கஸல் பதிப்பகம், 2021.
குறியீட்டு எண்: AFZ
அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
இருபத்தைந்து ஆண்டுகளாக பல பின்னணிகளில் புனையப்பட்ட
சிறுகதைகளை வட ஆற்காடு உருது முஸ்லிம்களின் வட்டார வழக்கு கலந்து கூறுகிறார் ஆசிரியர். சக மனிதனுக்கு நன்மை செய்வதே மார்க்கம் சொன்ன வழிமுறை என்பதைக் கதை சொல்லும் பாங்கில் தெளிவுபடுத்துகிறார்.
‘மாறு’ என்னும் சிறுகதையில் இஸ்லாமியர் வாழ்வில் குன்றக்குடி அடிகளாரின் வரிகள் மதங்களைக் கடந்து கலந்து நிற்கிறது. ‘பெரிய மசூதித் தெரு’ சிறுகதையில் வெயில் காலத்தில் திண்ணையில் தண்ணீர் பானை வைக்கும் இயல்பான மனிதர்கள் விரவிக் கிடக்கிறார்கள்.
‘சடலம்’ சிறுகதையில் தன் குடிபோதையால் ஏற்பட்ட விபத்தில் இறந்த இளைஞனின் உடலை அவனது மதமரபுப்படி நல்லடக்கம் செய்து மனசாட்சியின் சாடலில் இருந்து விடுதலை பெறுகிறார் காவல்துறை அதிகாரி.
‘நீங்கள் கேட்காதவை’ சிறுகதையில் குடி, சூதாட்டம் என்று சீரழிந்து கொண்டிருந்த கணவனோடு போராடுகிறாள் ஸமீனா. இறுதியாக அவன் பட்ட கடனை அடைக்கவும் பிள்ளைகளைக் கரை சேர்க்கவும் வெளிநாட்டில் வேலைக்குச் செல்லத் தீர்மானிக்கிறாள். அதற்காக அவள் நினைத்துப் பார்க்க முடியாத பல தியாகங்களைச் செய்யவும் துணிகிறாள்.
உலக நாடுகளின் அரசியலால் நாடோடியாய் இடம்பெயர்ந்து வாழும் மனிதர், மனக்கட்டுப்பாட்டை தவறவிட்டு மீட்டெடுக்கும் கணவன், தன் ஏழு குழந்தைகளோடு அனாதரவாய் நிற்கும் பெண் குழந்தையையும் வளர்க்க முடிவெடுக்கும் மனிதர் எனப் பல கதைமனிதர்கள் நாம் புரிந்து வைத்துள்ள வரையறைகளுக்கு அப்பாற்பட்டவர்களாய் செயல்பட்டு மனத்தை நெகிழ்த்துகிறார்கள். புனைவின் அழகிய முரண்கள் யதார்த்தத்தை நினைவுறுத்துவதோடு, மனிதம் மாறாத மானுடப் பண்புகளைப் போற்றுகிறது.
தேசிய நூலக வாரியத்துக்காக, பாத்திமா
இந்த நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg
.png)





English (US) ·