பட்டியலின பெண்ணை சமைக்க விடாத தலைமை ஆசிரியர்

23 hours ago 11

Last Updated:Dec 20, 2025 11:25 PM IST

பெற்றோருக்கு அறிவுரை கூறாமல் தன்னை இங்கு சமைக்க கூடாது எனக்கூறுவது மனவேதனையை அளிப்பதாகவும் சமயலர் நிரோஷா தெரிவித்தார்

சின்னரெட்டியப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி
சின்னரெட்டியப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசுப்பள்ளியில் பணியாற்றி வந்த பட்டியல் இனத்தை சேர்ந்த சமயலரை பணி செய்யவிடாமல் தடுப்பதாக தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சின்னரெட்டியப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த நிரோஷா சமயலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இப்பள்ளியில் பயிலும் மானவர்களின் பெற்றோர்கள் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் சமயலராக இருப்பதால் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் தலைமை ஆசிரியர் பானுமதி தன்னை பணிக்கு வரவேண்டாம் என சொல்லிவிட்டதாக நிரோஷா கவலையுடன் கூறினார். அரசு பள்ளியில் சாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு குறித்து கற்றுத்தரும் ஆசிரியர் பெற்றோருக்கு அறிவுரை கூறாமல் தன்னை இங்கு சமைக்க கூடாது எனக்கூறுவது மனவேதனையை அளிப்பதாகவும் சமயலர் நிரோஷா தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First Published :

Dec 20, 2025 11:23 PM IST

Read Entire Article