Last Updated:October 14, 2025 8:51 AM IST
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, எத்தனை நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும் என்று விவரித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டபேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, கரூரில் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, நாகாலாந்து ஆளுநர் மறைவு உள்ளிட்ட துயர சம்பவங்களுக்கு செவ்வாய் கிழமையன்று இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும் என்று கூறினார்.
பா.ம.க தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுக்கள் தன்னுடைய பரிசீலனையில் உள்ளதாகவும், அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர மற்ற கட்சியினர் பங்கேற்றதாகவும் சபாநாயகர் விளக்கம் தந்தார்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, தமிழக சட்டசபை இன்று செவ்வாய்க்கிழமை (அக். 14) கூடுகிறது. வரும் 17-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கரூர் சம்பவம், கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப இருக்கின்றன. இந்த பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை இன்று கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
First Published :
October 14, 2025 8:51 AM IST