பலரும் பிஎப் திட்டத்தை ஒரு சேமிப்பு திட்டமாக மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இதன் பின்னால் ஒரு பெரிய மறைமுக நன்மை இருப்பது பலருக்குத் தெரியாது.
15

Image Credit : Google
பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிஎப் தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. பலரும் இதை ஒரு சேமிப்பு திட்டமாக மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இதன் பின்னால் ஒரு பெரிய மறைமுக நன்மை இருப்பது பலருக்குத் தெரியாது. அது என்னவென்றால், பிஎப் கணக்குடன் இணைந்த இலவச ஆயுள் காப்பீடு. இந்த வசதி இபிஎப்ஓ வழங்கும் EDLI திட்டத்தின் மூலம் கிடைக்கிறது.
25
Image Credit : Google
ரூ.7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு
ஊழியர்களின் வைப்புத்தொகை-இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) திட்டத்தின் கீழ், பிஎப் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்காக ஊழியர் தனியாக எந்தப் பிரீமியமும் செலுத்த தேவையில்லை. இந்த காப்பீட்டுக்கான முழு தொகையும் நிறுவனமே செலுத்துகிறது. ஒருவர் வேலைக்கு சேர்ந்ததும் பிஎப் கணக்கு திறக்கப்படும் நேரத்தில், தானாகவே இந்த காப்பீட்டு திட்டத்திலும் இணைக்கப்படுகிறார்.
35
Image Credit : Asianet News
மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் பிஎப் தொகை
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் எதிர்பாராத விபத்து அல்லது மரணம் ஏற்பட்டால், அந்த ஊழியரின் குடும்பத்தில் திடீர் பொருளாதார சிக்கலில் இருந்து பாதுகாப்பதுதான். இதனால், குடும்பத்தினருக்கு குறைந்தது ஒரு நிதி ஆதாரம் கிடைக்கிறது. இதற்காக தனியாக எந்த விண்ணப்பமும், படிவமும் நிரப்ப தேவையில்லை என்பதும் ஒரு பெரிய நன்மை ஆகும்.
45
Image Credit : Asianet News
பிஎப் ஆயுள் காப்பீடு
அப்படியானால் ரூ.7 லட்சம் காப்பீட்டு தொகை எப்படி கணக்கிடப்படுகிறது? கடந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ (DA) அடிப்படையில் இந்த கணக்கு போடப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.15,000 சம்பளத்தை கணக்கில் கொண்டு, அதன் 35 மடங்கு தொகைக்கு கூடுதலாக ரூ.1.75 லட்சம் போனஸ் சேர்க்கப்படுகிறது. இதனால் மொத்தமாக ரூ.7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது.
55
Image Credit : Asianet News
இபிஎப்ஓவின் திட்டம்
பிஎப் கணக்கு வைத்திருப்பவர் பணியில் இருக்கும்போதே இறந்துவிட்டால், அவர் குறிப்பிடப்பட்ட நாமினி அல்லது சட்டபூர்வ வாரிசு இந்தத் தொகையைப் பெறலாம். இதற்காக EDLI படிவம் 5 IF எந்த படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களை இபிஎப்ஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, அனைவரும் தங்கள் பிஎப் கணக்கில் e-nomination முறையை உடனே முடித்துவைப்பது மிகவும் அவசியம். இது, நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் குடும்பத்திற்கு பெரிய உதவியாக இருக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
.png)
22 hours ago
19






English (US) ·