பிரச்சனையா.? - போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட வேண்டாம்... ரோந்து காவலர்களின் விவரங்கள் இனி போனுலேயே தெரிஞ்சிக்கலாம்...

54 minutes ago 8

Last Updated:May 12, 2026 5:28 PM IST

பொதுமக்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களின் எண்களைத் தெரிந்து வைத்திருப்பது குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், அவசர உதவி கோரவும் பேருதவியாக இருக்கும்

தஞ்சாவூர் மாவட்ட காவல்

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் அந்தந்தப் பகுதிகளில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிவிடப்பட்டு வருகின்றன.

ரோந்து காவலர்கள்

இதன் மூலம் அவசரக் காலங்களில் பொதுமக்கள் எவ்விதத் தாமதமும் இன்றி நேரடியாகப் பணியில் இருக்கும் காவலரைத் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு உதவியைப் பெற முடியும்.இந்த வழக்கமான நடைமுறையின்படி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரோந்து காவலர்களின் விவரங்களைத் தெரிந்து கொள்ள மாவட்ட காவல் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தைப் பயன்படுத்தலாம்.

தஞ்சாவூர் மாவட்ட காவல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டம்,ஒழுங்கை நிலைநாட்டவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இரவு நேர ரோந்துப் பணியில் இருக்கும் காவலர்களின் விவரங்களை வெளியிடும் நடைமுறை வழக்கத்தில் இருந்து வருகிறது. பகல் நேரங்களுக்கு இணையாக இரவு நேரங்களிலும் அவ்வப்போது சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பணியில் இருக்கும் காவலரின் தொலைபேசி எண்ணைத் தெரிந்து வைத்திருப்பது அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

காவலர்களின் விபரம்

தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்ட் போலீஸ் (Thanjavur District Police) என்ற அந்தப் பக்கத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் எட்டு உட்கோட்டங்களிலும் பணியில் இருக்கும் காவலர்களின் பட்டியல் தினமும் முறையாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

ரோந்து காவலர்கள்

பொதுமக்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களின் எண்களைத் தெரிந்து வைத்திருப்பது குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், அவசர உதவி கோரவும் பேருதவியாக இருக்கும். எனவே உங்கள் பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவலர் யார்? என்பதைத் தெரிந்து கொள்ள மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தைத் தொடர்ந்து கண்காணிப்பது பயனுள்ளதாக அமையும்.

வீட்டில் அதிக நேரம் இருப்பதால் மின் கட்டணம் உயர்கிறதா? மாதாந்திர செலவுகளை குறைக்க டிப்ஸ்!

வீட்டில் அதிக நேரம் இருப்பதால் மின் கட்டணம் உயர்கிறதா?

  • ஏசி, ஃபிரிட்ஜ், ஃபேன் அதிகம் பயன்படுத்தினால் மின் கட்டணம் கூடும்.

  • ஏசியை 24-26°C வைக்கவும், தேவையில்லாத சாதனங்களை அணைக்கவும்.

  • புதிய சாதனங்களால் மாற்றுவது மின் செலவைக் குறைக்கும்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article