Last Updated:May 17, 2026 8:34 AM IST
பிரபல ராப் பாடகர் வேடன் அணிந்திருந்தது உண்மையான சிறுத்தையின் பல் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல ராப் பாடகர் வேடன் அணிந்திருந்தது உண்மையான சிறுத்தையின் பல் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல ராப் பாடகரான வேடன் மற்றும் அவரது நண்பர்கள் எட்டு பேர் போதைப் பொருள் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, சிறுத்தை பல்லுடன் கூடிய செயினை வேடன் அணிந்திருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேடன் மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறை அவரை கைது செய்தது.
பின்னர், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை பல் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், வேடன் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், வேடன் அணிந்திருந்த செயினில் இருந்தது உண்மையான சிறுத்தையின் பல் என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. இந்த வழக்கு விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.png)





English (US) ·