மும்பை: கணவன் துணையோடு காதலன் கொலை; டிரம்மில் அடைத்து சாக்கடையில் வீசிய பெண் சிக்கியது எப்படி?

1 hour ago 11

மும்பையில் தனது கணவன் துணையோடு காதலனைக் கொலை செய்து டிரம்மில் அடைத்து சாக்கடையில் போட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

Published:Just NowUpdated:Just Now

மும்பை டிரம் கொலை

மும்பை டிரம் கொலை

டிரம் கொலைகள் பற்றி உத்தரப் பிரதேசத்தில் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மும்பையில் தற்போது அது போன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.

மும்பை அருகில் உள்ள மும்ப்ரா என்ற இடத்தில் வசித்தவர் அர்பாஸ் அலிகான். இவர் வேலைக்குச் செல்வதாக தனது வீட்டில் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு இறுதியில் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அர்பாஸ் கடைசியாக அங்குள்ள வசாய் கடற்கரை பகுதியில் நின்றது, அவரது மொபைல் போன் சிக்னல் மூலம் தெரிய வந்தது.

அதேநேரத்தில் அர்பாஸ் காதலித்த மஜபீன்ஷேக் என்பவரின் போன் சிக்னலும் அதே இடத்தில் காட்டியது.

இதையடுத்து மஜபீனைப் பிடித்து சென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் ஆரம்பத்தில் எதையும் சொல்ல மறுத்தார். ஆனால் அதன் பிறகு உண்மையை ஒப்புக்கொண்டார். மஜபீன் தனது காதலனை மிரட்டி பணம் பறிக்க தனது கணவனோடு சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.

கணவன் துணையோடு காதலன் கொலை

கணவன் துணையோடு காதலன் கொலை

இதற்காக மஜ்பீன் தனது காதலனுக்கு போன் செய்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அர்பாஸ் அலியும் அப்பெண் சொன்ன இடத்திற்குச் சென்றார். அங்கு மஜ்பீனுடன் அவரது கணவன் மற்றும், அவரது சகோதரர் உட்பட 4 பேர் இருந்தனர். அவர்கள் அர்பாஸிடம் பணம் கேட்டனர்.

ஆனால் அவரிடம் பணம் இல்லை. இதனால் கோபத்தில் நான்கு பேரும் சேர்ந்து அர்பாஸை பிளாஸ்டிக் பைப்பால் அடித்து உதைத்தனர். இதில் அர்பாஸ் இறந்து போனார்.

இதையடுத்து ஆதாரத்தை அடியோடு மறைப்பதற்காக அர்பாஸ் உடலை பிளாஸ்டிக் பச்சை கலர் டிரம் ஒன்றை வாங்கி அதில் உடலை வைத்து அங்குள்ள சாக்கடையில் தூக்கிப் போட்டுவிட்டனர் என்று விசாரணையில் தெரிய வந்தது.

இதில் மஜ்பீன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸாரின் விசாரணையில் மஜபீனுடன் கடந்த 2021ம் ஆண்டில் இருந்து அர்பாஸ் திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். பொறியாளரான அர்பாஸ் அடிக்கடி மஜ்பீனுக்கு பணம் அனுப்பிக்கொண்டிருந்தார்.

அதோடு இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர். ஆனால் திடீரென அர்பாஸ் பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். இதையடுத்து தனது கணவர் ஹசன் ஷேக்குடன் சேர்ந்து அர்பாஸைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

Read Entire Article