Last Updated:May 15, 2026 10:18 PM IST
தந்தை தாய் இல்லாத மாணவியின் பிறப்பு சான்றிதழில் வளர்ப்பு மாமா அத்தை பெயர் சேர்க்க பிறப்பு இறப்பு பதிவாளருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

மாணவி ஒருவரின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோர் பெயருடன் 'வளர்ப்பு' என்ற பின்னொட்டுடன் மாணவியின் மாமா, அத்தை பெயர்களையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தந்தை இறந்துவிட, தாயும் கைவிட்டுவிட மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது தந்தைவழி மாமா- அத்தை பாதுகாப்பில் வளர்ந்துள்ளார். மற்ற அனைத்து ஆவணங்களிலும் பெற்றோர் பெயராக மாமா, அத்தை பெயரே உள்ள நிலையில், பிறப்புச் சான்றிதழிலும் இடம்பெற உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, உரிய நடவடிக்கை எடுக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்து உயர்நீதிமன்ற கிளை, குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாக்கும் உரிமையை மதிப்பது அரசின் கடமை மட்டுமல்ல. உரிய உதவியை வழங்குவதும் அதன் கடமையே என தெரிவித்துள்ளது.
மேலும், அவரது மாமா மற்றும் அத்தையின் நோட்டரி செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தவுடன், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர், மாமா மற்றும் அத்தையின் பெயர்களையும் உரிய பத்திகளில் சேர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
First Published :
May 15, 2026 10:18 PM IST
பிறப்பு சான்றிதழில் மாமா – அத்தை பெயர் சேர்க்க கோரி மனு… - உயர்நீதிமன்றம் மதுரை கிளை அளித்த உத்தரவு
.png)







English (US) ·