பிளஸ்-2 பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 92.26 சதவீதம் பேர் தேர்ச்சி!

1 hour ago 16

சென்னை, மே 9- 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 92.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம்.

இதுபற்றி சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 35 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 2025-2026ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் 2,257 மாணவர்கள், 2,922 மாணவிகள் என மொத்தம் 5,179 பேர் தேர்வு எழுதினார்கள்.

இதில், 2,028 மாண வர்கள் (89.85 சதவீதம்), 2,750 மாணவிகள் (94.11 சதவீதம்) என மொத்தம் 4,778 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.26 சதவீதம் ஆகும். இதுவே  கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதம் 88.12 ஆக இருந்தது.

பாடவாரியான தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரை, கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் 8 பேர், கணினி அறிவியல் பாடப்பிரிவில் 10 பேர், கணக்கு பதிவியல் பாடப்பிரிவில் 8 பேர், பொருளாதாரம், வணிகக் கணிதம், அடிப்படை இயந்திரப்  பொறியியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தலா 2 பேர், உணவு சேவை மேலாண்மை பாடப் பிரிவில் 90 பேர், நெசவு மற்றும் ஆடை வடிவமைப்பு பிரிவில் 4, தணிக்கையியல் பிரிவில் 47 பேர் என மொத்தம் 173 மாணவ, மாணவிகள்
100-க்கு 100 மதிப் பெண்களை பெற்றுள் ளனர்.

முதல் 5 இடம்

மொத்த மதிப்பெண்கள் அடிப் படையில் 551 முதல் 600 வரையிலான மதிப்பெண்கள் வரை 43 பேரும், 501இல் இருந்து 550 வரை 241 பேரும், 451இல் இருந்து 500 வரை 543 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 593 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளது.

பெரம்பூர் எம்.எச்.சாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 586 மதிப்பெண்கள் பெற்று 2ஆவது இடம், பெரம்பூர் மார்க்கெட் தெருவில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி 583 மதிப்பெண்கள் பெற்று 3ஆவது இடம், புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியானது 579, 578 ஆகிய மதிப்பெண்கள் பெற்று – 4 மற்றும் 5ஆவது இடத்தை பெற்றுள்ளது.

இதேபோல, நுங்கம் பாக்கம் சென்னை மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளி, சி.அய்.டி. நகர் சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Read Entire Article