புக்கிட் தீமாவில் உள்ள டர்ஃப் சிட்டி வீடமைப்புத் திட்டத்தின் மாதிரி வரைபடம். - படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம்
நகர மறுசீரமைப்பு ஆணையம், டிசம்பர் 1ஆம் தேதி 2025ஆம் ஆண்டின் பெருந்திட்டத்தை வெளியிட்டது.
அதன்படி, புதிய வீடமைப்புப் பேட்டைகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் தற்போதுள்ள வீடமைப்பு நகரங்களின் வசதிகளுக்கு அருகில் கட்டப்படவுள்ளன.
சிங்கப்பூர் நிலங்களின் பயன்பாடு குறித்த அண்மைய பெருந்திட்ட வரைபடங்களில் 80,000 வீடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள பத்து பேட்டைகளில் கட்டப்படும்.
புக்கிட் தீமாவில் உள்ள டர்ஃப் சிட்டி, மரினா சவுத் ஆகிய வட்டாரங்கள் உள்ளடங்கிய புதிய பேட்டைகளில் பொதுமக்களுக்கான வீடுகளும் தனியார் வீடுகளும் கட்டப்படவுள்ளன.
பெருகிவரும் மக்கள் தொகையைச் சமாளிக்க, நிலம் மிகவும் அரிதாக உள்ள சிங்கப்பூர் எவ்வாறு அதன் வளங்களை மறுசீரமைத்துக்கொள்கிறது என்பதை பெருந்திட்டம் வெளிப்படுத்துகிறது.
பாரம்பரியமும் மரபும் நிறைந்த முக்கிய இடங்களைப் பாதுகாத்து அவற்றை மறுசீரமைப்புடன் ஒருங்கிணைக்கும் அரசாங்க முயற்சிகளையும் பெருந்திட்டம் உணர்த்துகிறது.
கடந்த 2000ஆம் ஆண்டில் 4.03 மில்லியனாக இருந்த மக்கள் தொகை, 2025ஆம் ஆண்டில் 6.11 மில்லியனாக அதிகரித்துள்ளது. இருப்பினும், தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் பதிவான மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 481,000ஆக இருந்து, 2023ஆம் ஆண்டில் 397,000ஆகக் குறைந்துள்ளது.
அதேபோன்று தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. கடந்த 2000ஆம் ஆண்டில் 195 தொடக்கப்பள்ளிகளும் 157 உயர்நிலைப் பள்ளிகளும் இருந்தன. கடந்த 2024ஆம் ஆண்டில் 177 தொடக்கப்பள்ளிகளும் 132 உயர்நிலைப் பள்ளிகளும் இருப்பது பதிவாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து பத்து பள்ளிகள் இருந்த இடங்கள், வீடமைப்புக்கு வழிவிட்டது அதன் காரணம், என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் நடத்திய சோதனைகள் காட்டுகின்றன.
உதாரணமாக, கடந்த மார்ச் மாதம் பள்ளி வளாகங்கள் மறுவரையறை செய்யப்பட்டன. அதன்படி சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி காலாங் பகுதிக்கு மாற்றப்பட்டது. சிங்கப்பூர் விளையாட்டு கல்விக் கழகம், தேசிய இளையர் விளையாட்டுக் கழகம் ஆகிய இரு அமைப்புகளின் அருகில் அமையும் நோக்குடன் அந்தப் பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டது.
.png)






English (US) ·