புதிய கட்சி தொடங்கும் சசிகலா? – ஆலோசனைக்குப் பின் முன்னாள் தலைமை கொறடா சொன்ன தகவல்

1 hour ago 15

Last Updated:Feb 10, 2026 7:46 PM IST

புதிய கட்சி தொடங்குவது குறித்து இன்னும் ஓரிரு நாளில் சசிகலா தனது இறுதி முடிவை அறிவிப்பார் என சசிகலாவை சந்தித்த பிறகு முன்னாள் அரசு தலைமை கொறடா நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

News18
News18

சென்னை, போயஸ் கார்டன் இல்லத்தில் தனது ஆதரவாளர்களோடு இரண்டாம் கட்டமாக சசிகலா ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று தனிக்கட்சி தொடங்குவதற்கு சசிகலா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் தனது ஆதரவாளர்களுடன் சசிகலா தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் சசிகலாவின் நிலைப்பாடு என்ன என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ள நிலையில், அமமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து வந்துள்ள ஆதரவாளர்கள் சசிகலாவை சந்தித்தனர்.

தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு சசிகலா தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசிக்க உள்ளார். இன்றைய தினம் சசிகலாவை சந்திக்க வந்த ஆதரவாளர்களுக்கு படிவம் ஒன்று வழங்கப்பட்டது. அதில் ஆதரவாளர் பெயர், அவர்களது விவரம் மற்றும் ஏற்கனவே உள்ள கட்சியில் வகித்த பதவிகளின் பொறுப்புகள் உள்ளிட்டவை இடம் பெற்று இருந்தது.

சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அரசு தலைமை கொறடா நரசிம்மன் பேசியதாவது; “2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து ஆதரவாளர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது ஒரு சிலர் சசிகலா இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும் அவர் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்துள்ளோம்.

புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக சசிகலா அறிவிப்பார். அவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் உட்பட்டு நாங்கள் செயல்படுவோம்” என தெரிவித்தார்.

Read Entire Article