Last Updated:Feb 10, 2026 9:07 PM IST
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோ வீடியோ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரஜினி, கமல் கெட்டப் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோ வீடியோ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரஜினி, கமல் கெட்டப் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
இதையடுத்து ரஜினி நடிக்கும் 174-வது படத்தில் கமல் நடிக்கிறார். இந்தப் படம் கமலின் 238 வது படம் என்பது கவனிக்கத்தக்கது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான புரோமோ படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் கமல்ஹாசனும், ரஜினியும் 80ஸ் கெட்டப்பில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டி ஏஜிங் தொழில்நுட்பத்துடன் இருவரின் வயதும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான புரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
.png)








English (US) ·