புதிய புளுகுணிப் புரட்டர்கள் புறப்பட்டுள்ளனர், எச்சரிக்கை!

17 hours ago 15

– ஊசிமிளகாய் –

ஸநாதனம் என்று சொல்வதெல்லாம் சரித்திரத்தையே கபளீகரம் செய்வதில் ஆரியம் அளவற்ற புளுகுகளையும், புரட்டு களையும் ஒன்றிய ஆட்சி ஆர்.எஸ்.எஸ்.சால் உருவாக்கப்பட்ட பொய் வியாபாரிகளின் கடைச் சரக்கே!

புதுப்புது ‘காவிச் சாமியார்கள்’ புறப்பட்டு, ‘திடீர் ஆனந்தாக்களாக’ தங்களுக்குத் தாங்களே முடிசூட்டிக் கொண்டு, கொள்ளையடிக்கும் குபேரச் சீமான்களாகி, இப்போது தமது ‘‘காவித்தனத்தை’’ (Saffronisation) இந்திய நாட்டில் கட்டவிழ்த்து, ‘கோயபல்சின்’ நவீன குருநாதர்களாகி விட்டது போதாது என்று, வெளிநாடுகளில், அமைதி, வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுடன் வாழுகிறவர்களையும் தங்கள் வயப்படுத்தி, கலவரத்திற்கு வித்தூன்றும் வகையில் உச்சவரம்பின்றி புளுகித் தள்ளுகின்றனர்.

இப்போது வெளிவந்துள்ள ஒரு புதிய புரட்டுச் செய்தி – இதோ –

‘ஆஸ்திரேலியா’ கண்டத்திற்கு எப்படி அந்தப் பெயர் வந்தது தெரியுமா? என்று அங்கே குடியேறியுள்ள காவிச் சங்கிகள் மதத்தின் அடிப்படையில், கலாச்சாரத்தின் போர்வை – முகமூடியுடன் தங்களது ஜாதிவெறி,  மதவெறிக்குப் புதிய புதிய காவித்தன வித்தைகள்மூலம் தந்து, புதிய பிழைப்பை நடத்தி, அங்கே ஜாதி வெறிக் கிருமிகளைப் பரப்ப முயலுகின்றன.

எனவேதான், ‘பெரியாரே விஷ முறிவு மருந்து’ என்று கண்டு, அங்கே ‘பெரியார் – அம்பேத்கர்  சிந்தனை வட்டம்’ உருவாகி, அந்த விஷக் கிருமிகளை (ஜாதி, மதவெறி பேதத்தினை) ஒழித்துக்கட்ட, அம்மக்களும் சரியான மருந்தினைத் தந்து கொண்டிருக்கிறார்கள், சளைக்காமல்!

இப்போது ஒரு புதுக் காவிக் கரடி!

‘‘இராமாயணப் போர் முடிந்தவுடன், தனது ஆயுதங்களையெல்லாம் எங்கு வைப்பது என்று யோசித்தாராம் இராமர்.

அதற்காக உருவாக்கியதுதான் ‘அஸ்திராலாயா’!

அதுதான், ‘ஆஸ்திரேலியா’ என்று அழைக்கப்படுகிறதாம்!

இப்படி புளுகுணிப் புரட்டர்களின் புதுக் கண்டுபிடிப்பை ‘அனிருத்திராச்சாயா’ என்ற காவிச் சாமியார் ஒரு புதிய ‘கப்சா’ பேக்டரியை உருவாக்கி, பரப்பி, அங்கே மதக் கலவரத்திற்குத் தூபம் போடுகின்றார். இங்கேயும் சில கதாகாலட்சேபப் பேர்வழிகள் இதே கதையைக் கட்டவிழ்க்கின்றனர். திட்டமிட்டபொய்ப் பிரச்சாரம்!

இதனை முளையிலேயே கிள்ளி எறிந்து, முறியடிக்க வேண்டாமா?

அதற்காகவே, முன்னதாகவே மாமருத்துவர் இந்தக் கிருமிகளை எதிர்கொள்ள, அழிக்க ஆஸ்திரேலியாவில் குடியேறி,  தமது பகுத்தறிவு மாத்திரைகளை வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முற்போக்காளர்களே ஒன்று திரண்டு, அந்தக் காவிச் சாமியாரின் முகமூடி புளுகிணிகளைப் புறமுதுகிட்டு ஓட ஆயத்தப்படுத்துவீர்!

‘‘இது நல்ல சமயம் அல்லவா – இதை நழுவ விடுவோமா!’’ என்று புறப்பட்டுப் பொய் மூட்டைப் பலூன்களை எதிர்க்க, குடும்பம் குடும்பமாய்த் திரளும் வாய்ப்பு!

Read Entire Article