Last Updated:Dec 20, 2025 10:52 PM IST
கடலூரில் புற்றுநோய் கண்ணராபேட்டை தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்ததுரசாயன தொழிற்சாலை வேண்டாம்

கடலூரில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயன தொழிற்சாலை வேண்டாம் என கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.கடலூர் சிதம்பரம் சாலையில் உள்ள சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் செயல்பட்டு வரும் கெம்பிளாஸ்ட் ரசாயன தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய அதன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஆலை ரசாயனத்தால் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் சித்திரப்பேட்டை, ராசா பேட்டை, தமன்னா பேட்டை, சொத்திகுப்பம் நடுத்திட்டு, நொச்சிகாடு, செம்மங்குப்பம் ஆகிய கிராமங்கள் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கண்ணராபேட்டை தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என, 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பு பாமகவினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், தமிழ் பேரரசு கட்சி கௌதமன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஏற்பட்டனர். மேலும். தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் சிதம்பர சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம், ஆலை விரிவாக்கத்துக்கு திமுக, அதிமுக, விசிக, அன்புமணி தரப்பு பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
Location :
Cuddalore,Cuddalore,Tamil Nadu
First Published :
Dec 20, 2025 10:52 PM IST
.png)






English (US) ·